உடைந்த கையுடன் வெள்ள நிவாரணப் பணிகளில் களமிறங்கிய அமலா பால்… குவியும் பாராட்டுகள் !!

By Selvanayagam PFirst Published Aug 18, 2018, 9:21 AM IST
Highlights

சினிமா படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் கை உடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்த உடைந்த கையுடன் நடிகை அமலா பால் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அமலா பாலின் இந்த சேவையை அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.

கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி உள்ளன.

இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது

கொச்சி விமான நிலையத்தில் தேங்கியுள்ள வெள்ளம் வடியாததால், 26-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் இரண்டாம் கட்ட பருவமழைக்கு இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் திரையுலகைச் சேர்ந்தவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்ட கேரள மக்களுக்கு தங்கலால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர், நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் ரூபாயும், சூர்யா, கார்த்தி ஆயியோர் 25 லட்சம் ரூபாயும், கமல்ஹாசன்  மற்றும் சிவ கார்த்திகேயன்10 லட்சம் ரூபாயும். நடிகை ஸ்ரீபிரியா, ரோகினி, நயன்தாரா தலா 10 லட்சம் ரூபாயும் முதலமைச்சர்  நிவாரணத்துக்கு அளித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை அமலா பால் சற்று வித்தியாசமாக நிவாரணப் பொருட்களை வாங்கி நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகிறார்.

நடிகை அம்லாபால் ஏற்கனவே படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில், கை உடைந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனிடையே, கேரளாவில் வெள்ளப்பாதிப்பு மோசமடைந்ததையடுத்து, அவர் உடைந்த அந்த கையுடன்  முடிந்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கி லாரியில் ஏற்றிச் சென்று நிவாரண முகாம்களுக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் நேரில் சென்று தனது கைகள் உடைந்ததையும் பொருட்படுத்தாது வழங்கி வருகிறார்.

அமலா பாலின் இந்த சேவையை கலைத்துறையினரும், பொது மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்
 

click me!