நாட்டுக்காக ஓட்டு போடுங்க. உங்களுக்காக மாஸ்க் போடுங்க! பிக்பாஸ் ஆரியின் விழிப்புணர்வு வீடியோ!

By manimegalai aFirst Published Mar 31, 2021, 6:02 PM IST
Highlights

இந்நிலையில், தமிழக தேர்தல் ஆணையத்துடன் இணைந்து நடிகரும், சமூக ஆர்வலருமான ஆரி அர்ஜுனன்  தேர்தல் பிரச்சாரம் விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதில் முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு, 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருந்ததாகவும், இரண்டாம் இடம் பிடித்த பாலாவுக்கு 6 கோடியே 14 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்ததாகவும் அறிவிக்கப்பட்டது. ஆரம்பம் முதலே ஆரிக்கு ரசிகர்களின் ஆதரவு பலமாக இருந்து வந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சக போட்டியாளர்களிடம் காண்பித்த கண்ணியமும், புத்திசாலித்தனமும் அனைவரையும் கவர்ந்து. 

நடிப்பை தாண்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பில் இருந்தே, பல்வேறு சமூக அக்கறை கொண்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக பல்வேறு கிராமங்களுக்கு சென்று, அப்துல் கலாம் அவர்களின் வார்த்தைகள் படி மர கன்றுகள் நடுவது, இயற்க்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். தன்னுடைய மகளின் பிறந்தநாளுக்கு கூட மாடி தோட்டம் ஒன்றை தன் வீட்டில் அமைத்து அதனை பரிசாக கொடுத்தார்.

இந்நிலையில், தமிழக தேர்தல் ஆணையத்துடன் இணைந்து நடிகரும், சமூக ஆர்வலருமான ஆரி அர்ஜுனன்  தேர்தல் பிரச்சாரம் விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். இதில் ஓட்டு கேட்டு வரும் அனைவரும் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று கட்சி வேட்பாளர் முதல் தொண்டர்கள் அனைவருக்கும் அறிவுரை கூறுவது போல் இந்த விழிப்புணர்வு வீடியோ அமைந்துள்ளது.

நாட்டுக்காக ஓட்டு போடுங்க. உங்களுக்காக மாஸ்க் போடுங்க எனும் வாசகத்தோடு வரும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது... ஓட்டு போடுவது எப்படி நமது  கடமையோ, அதேபோல் சமூக இடைவெளி யோடு மாஸ்க் அணிந்து ஓட்டு போடுவது நமது கடமையாகும் என்கிறார் நடிகரும், சமூக ஆர்வலரும் ஆன ஆரி அர்ஜுனன் கூறியுள்ளார் இந்த வீடியோ ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Let us vote 🗳and live responsibly pic.twitter.com/NWx9hznQCl

— Aari Arjunan (@Aariarujunan)

click me!