மலேசியாவில் நடந்த விருது விழாவில் அபி சரவணனுக்கு விருது!

By manimegalai aFirst Published Aug 25, 2019, 4:40 PM IST
Highlights


நடிகர் என்பதையும் தாண்டி பல, சமூக விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகர் அபி சரவணனுக்கு மலேசியாவில் நடைபெற்ற விருது விழாவில் , சிறந்த சமூக சேவகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. 

நடிகர் என்பதையும் தாண்டி பல, சமூக விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகர் அபி சரவணனுக்கு மலேசியாவில் நடைபெற்ற விருது விழாவில் , சிறந்த சமூக சேவகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. 

அபி சரவணன், தமிழில் பட்டதாரி என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே, அட்ட கத்தி, சாகசம், குட்டிப்புலி ஆகிய படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்தார். 

தற்போது இவர், ப்ளஸ் ஆர் மைனஸ், மாயநதி, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம் திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும், இயற்கை பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு நேரடியாக சென்று தன்னுடைய நண்பர்கள் குழுவுடன் உதவிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில், இதுவரை, கஜா புயல் தாக்குதல், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம், அசாம் மழை பாதிப்பு, ஆகிய இயற்கை தாக்குதலில் மக்கள் அவதிப்பட்ட போது, ஓடி சென்று உதவியவர்களில் இவரும் ஒருவர்.

இந்நிலையில் இவருக்கு  மலேசியாவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், சிறந்த சமூக சேவை நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 130 விருதுகளில் இந்தியாவில் இருந்து 6 விருதுகள் தேர்வு செய்யப்பட்டது. இதில் ஒருவராக அபி சரவணனுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.


 

click me!