
வரும் ஜனவரி 31ம் தேதியோடு அபிராமி மெகாமால் முற்றிலுமாக இடிக்கப்பட்டு 17 மாடிகள் கொண்ட குடியிருப்புகள் கட்டப்பட இருப்பதாகவும் அதில் சைவ உணவு சாப்பிடுகிற பிராமணர் போன்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்று அந்நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஆயிரம் சீட்டுகள் கொண்ட அபிராமி மெகாமால் தியேட்டர்களில் புதுப்படம் ரிலீஸாகும் முதல் நாட்கள் தவிர பெரும்பாலான நாட்களில் தியேட்டரில் ஈ ஓட்டுகிறார்கள்.
இதனால் தியேட்டர் தொழிலோடு சேர்த்து அடுக்குமாடி குடியிருப்புகளையும் கட்டும் முடிவையும் அபிராமி நிர்வாகம் எடுத்துள்ளது. அந்த 17 மாடிகளில் முதல் மூன்று மாடிகளை தியேட்டருக்கும் மீதி 14 மாடிகளை குடியிருப்புக்கும் விட முடிவு செய்துள்ள நிலையில், ‘இப்பல்லாம் யாரு சாதி பாக்குறாங்க’ என்று கேட்கவேண்டிய நிலையில், 14 மாடிகளிலும் சைவ உணவுக்காரர்களுக்கே முன்னுரிமை என்று அந்நிர்வாகம் அறிக்கையாகவே வெளியிட்டுள்ளது.
17 மாடி கட்ட முறையான அனுமதி இருக்கிறதா என்கிற கேள்வி ஒருபுறமிருக்க, திருச்சியில் மாநாடு நடத்திய பெரியார் பேரன்களுக்கு சவால் விடும் வகையில் இந்த சைவ முன்னுரிமை இருப்பதாகவே தோன்றுகிறது. அப்படியானால் இனிமேல் அபிராமி மெகாமாலுக்கு சைவம் சாப்பிடுகிறவர்கள் மட்டுமே படம் பார்க்கவந்தால் போதுமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.