கவின் மேல காதல் வர இதுதான் காரணமா? அபிராமி சொல்லுறது நம்புற மாதிரியா இருக்கு!

Published : Jun 26, 2019, 12:36 PM IST
கவின் மேல காதல் வர இதுதான் காரணமா? அபிராமி சொல்லுறது நம்புற மாதிரியா இருக்கு!

சுருக்கம்

பிக் பாஸ் சீசன் 3 , இரண்டாவது சீசன்யை விட சற்று விறுவிறுப்பாகவே செல்கிறது.  குறிப்பாக இந்த சீசனில், சில சர்ச்சை பிரபலங்கள் இருப்பதால்,  நாட்கள் செல்ல செல்ல சண்டை சச்சரவுகள் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

பிக் பாஸ் சீசன் 3 , இரண்டாவது சீசன்யை விட சற்று விறுவிறுப்பாகவே செல்கிறது.  குறிப்பாக இந்த சீசனில், சில சர்ச்சை பிரபலங்கள் இருப்பதால்,  நாட்கள் செல்ல செல்ல சண்டை சச்சரவுகள் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபக்கம் இருக்க,  பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது நாளே காதல் கதையும் ஆரம்பமாகியுள்ளது.  அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ள, அபிராமி நடிகர் கவினை காதலித்து வருவதாக ஷெரினிடம் தெரிவித்தார்.

பலமுறை தன்னுடைய மனதில் உள்ள காதலை தெரியப்படுத்தும் விதமாக,  கவின்னை சுற்றி சுற்றி வருகிறார். அபிராமியின் செயல் அனைத்தையும் கண்டும் காணாமல் சற்றே விலகி விலகியே கவின் செல்வது போல் தோன்றுகிறது.

இந்நிலையில் நேற்றைய தினம், கவினுடன் அபிராமி பேசும் போது, "என்   அம்மா நிறைய சீரியல் பார்ப்பாங்க, நான் உன்னை பாக்கவே சீரியல் பார்ப்பேன். எனக்கு இப்போ உன் மேல கிரஷ் வரலை, முன்னாடியில் இருந்தே இருந்துச்சி என கூறுகிறார்.  இதுவே காதல் வர காரணம் என அபிராமி சொல்வது நம்புற கதையாவா இருக்கு? நீங்களே சொல்லுக பாஸ்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !