
‘99ல் நடந்த கார்கில் போரை கருவாகக் கொண்டு மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ பட உருவாக்கத்தின்போது தனக்கும் இயக்குநருக்கும் இந்திய விமானப்படை விஞ்ஞானி அபிநந்தனின் தந்தை குறிப்பிடத்தக்க சில ஆலோசனைகள் வழங்கியதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் கார்த்தி ராணுவ வீரர்களிடம் கடுமையான பயிற்சிகளை பெற்றார். குறிப்பாக தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் உள்ள அபிநந்தன் தந்தை சிம்ஹகுட்டி வர்தமான் அவருக்கு பயிற்சி அளித்து இருந்தார். தனக்கு பயிற்சி அளித்தவரின் மகனே, அந்த படத்தின் கதையைப்போல பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியிருக்கும் சம்பவத்தை அறிந்து கார்த்தி அதிர்ச்சி வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் உருக்கமாக கூறியிருப்பதாவது:-
“ஒவ்வொரு இந்தியரின் உணர்விலும் இன்று ராணுவ வீரர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த தேசமும் ராணுவ வீரர்களின் குடும்பங்களின் பின்னால் நிற்கிறது. நமது ராணுவ வீரர்களின் துணிச்சலான இதயமும் தியாகமுமே நமது நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்கிறது.
இந்திய விமானப்படையின் மிகச்சிறந்த விமானிகளை நான் சந்திக்க நேர்ந்தது அதிர்ஷ்டவசமானது. அவர்களில் பலரை நான் படத்திற்காக சந்திக்க நேர்ந்தபோது மிகவும் பெருமைப்பட்டேன். அது எனக்கு கிடைத்த பெரிய கவுரவம். நமது வீரர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.” இவ்வாறு கார்த்தி கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.