
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான, ஆர்.ஜே.பாலாஜி கதையின் நாயகனாக நடித்த திரைப்படம் எல்.கே.ஜி. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்தார்.
கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போதைய அரசியல் நிகழ்வுகள், கச்சிதமான திரைக்கதை, காமெடி என ஆர்ஜே பாலாஜி மற்றும் ப்ரியா இந்த படத்தில் பொருந்தி நடித்திருந்தனர். கிளைமாக்ஸில் சொல்லும் கருத்துக்கள் இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் நேற்று 'எல்.கே.ஜி' படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த், இயக்குனர் பிரபு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் வெற்றி விழாவுக்கு பின், தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்த ஆர்.ஜே.பாலாஜி, 'நாங்கள் எதிர்பார்த்த வெற்றியை விட அதிக வெற்றியை தந்த ரசிகர்களுக்கு எங்களது நன்றிகள்!
இப்போது நாங்கள் உங்களுக்கு திருப்பி தர வேண்டிய நேரம் இது என கூறி இந்த படத்தின் வெற்றிக்கு கைமாறு செய்யும் விதமாக கஜா புயலால் பாதித்த டெல்டா பகுதிகளில் உள்ள பத்து அரசு பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளி மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இதற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.