
பிக் பாஸ் பஜாரி காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு பலரும், எப்படியும் இந்த வாரம் ஓவியாவை எலிமினேட் செய்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி வருகின்றனர்.
அதிலும் ஜூலி, பிக் பாஸ் வீதியில் இல்லாத ஒரு விதியை சொல்லி, ஓவியாவை எலிமினேட் செய்யலாம், நான் அதை படித்தேன் என அடித்து கூறுகிறார்.
அப்படி என்ன சொன்னார் தெரியுமா... இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள ஒருவரை போட்டியாளர்கள் யாருக்கும் பிடிக்க வில்லை என்றால் போட்டியாளர்கள் அனைவரும் இணைத்து அவரை வெளியேற்றும் விதி உள்ளது என்று தான் கூறினார். இதை கேட்டுக்கொண்டிருந்த ஆரவ் அப்படி ஒரு விதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்திருந்தால் முதல் வாரமே நீ வெளியேற்ற பட்டிருப்பாய் என அவருக்கு செம நோஸ் கட் கொடுத்தார்.
இந்த தகவல் சினேகன் காதுக்கு வர... ஜூலி பொய் சொல்லாதே நான்கு விதிகள் மட்டும் தான் இருக்கிறது இது போன்ற ஒரு விதி இல்லை என கூறி வெளியேற்றப்படும் விதிமுறைகள் பற்றி கூறினார்.
அவை...
போட்டியாளருக்கு உடல் நலம் இல்லை என்றால் அவர் வெளியேற்றப்படுவார்.
போட்டியாளர் மக்களால் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்படலாம்.
பிக் பாஸ் விதியை மீறினால் வெளியேற்றப்படுவார்.
பிக் பாஸ் முடிவு செய்தால் எந்த ஒரு காரணமும் இன்றி வெளியே அனுப்பலாம்.
என்று இந்த காரணங்களை கூறுகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.