
இதுவரை நடித்திருக்கும் 59 படங்களில் ஜஸ்ட் மூன்றே படங்களில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடித்திருக்கும் தல அஜீத் 13 ஆண்டுகால இடைவெளிக்குப்பின்னர் மீண்டும் கைகோர்க்கவிருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘94 ல் கே.சுபாஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘பவித்ரா’, 2000ல் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்’, 2006ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ’வரலாறு’ ஆகிய மூன்று அஜீத் படங்களில் மட்டுமே அஜீத்தும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இந்நிலையில் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜீத் அடுத்து நடிக்கப்போகும் ‘தல 60’ படத்தின் டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வியாபார வெளியை இன்னும் விஸ்தரிக்கும் நோக்கில் தயாரிப்பாளர் தரப்பு ரஹ்மான் பெயரை சிபாரிசு செய்திருக்கிறதாம்.
ஆனால் இயக்குநர் வினோத்தோ தனது தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்கு இசையமைத்த ஜிப்ரானை சில தினங்களுக்கு முன்பே படப்பிடிப்புக்கு வரவழைத்து அஜீத்துக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார்.ஆக யார் பெயரை டிக் அடிப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் அஜீத்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.