ஹாலிவுட் படத்துக்கு வசனம் எழுதப்போகும் அவ்வளவாகப் படிக்காத தமிழ்ப்பட இயக்குநர்...

By Muthurama LingamFirst Published Feb 15, 2019, 12:16 PM IST
Highlights

'அவரு அவ்வளவு பெரிய கில்லாடியா?..பி.ஏ.வுல கூட அரியர்ஸ் வச்சவராச்சே?’... என்று வலைதளங்களில் விவாதம் நடத்துவதற்கு ஒரு டாபிக் கிடைத்திருக்கிறது. யெஸ் ‘அவெஞ்சர்ஸ்’ ஆங்கிலப் படத்தின் தமிழ் டப்பிங்குக்கான வசனங்களை எழுதவிருக்கிறார் பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

'அவரு அவ்வளவு பெரிய கில்லாடியா?..பி.ஏ.வுல கூட அரியர்ஸ் வச்சவராச்சே?’... என்று வலைதளங்களில் விவாதம் நடத்துவதற்கு ஒரு டாபிக் கிடைத்திருக்கிறது. யெஸ் ‘அவெஞ்சர்ஸ்’ ஆங்கிலப் படத்தின் தமிழ் டப்பிங்குக்கான வசனங்களை எழுதவிருக்கிறார் பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

சூப்பர் ஹீரோ படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஸ்பைடர்மேன், பேட்மேன், அயன்மேன், தார், ஹல்க் உட்பட பல சூப்பர் ஹீரோ படங்கள் வசூலை வாரி குவித்து வருகின்றன. விறுவிறுப்பான திரைக்கதையும் வியக்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகள் உட்பட பல காரணங்கள் இதற்குக் கூறப்படுகின்றன.அதில், அவஞ்சர்ஸ் பட வரிசைக்கும் தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

’அவெஞ்சர்ஸ்’ பட வரிசையில் இப்போது உருவாகியுள்ள படம்,’அவஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ (Avengers: Endgame). ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ருபலோ, கிறிஸ் எவான்ஸ் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ருசோ சகோதரர்களான, அந்தோனி ருசோ, ஜோ ருசோ இயக்கியுள்ளனர். ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்தியாவில் இந்தப் படம், ஆங்கிலத்துடன் இந்தி, தெலுங்கு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியாகிறது. இதில் தமிழ்ப் பதிப்புக்கான வசனத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதுகிறார்.

இதுபற்றி ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது, ’சூப்பர் ஹீரோ படங்கள் எனக்குப் பிடிக்கும். இது, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை உற்சாகப் படுத்தும் படமாக இருக்கும். ஒரு எழுத்தாளராக, இயக்குனராக இருந்தவன், இப்போது ஒரு ரசிகனாக மாறியிருக்கிறேன். என் மகன் ஆதித்யா வுக்கு நன்றி. இந்த சூப்பர் ஹீரோ படத்தில் நானும் ஓர் அங்கமாக இருக்கிறேன் என்பது த்ரில்லான அனுபவம். ஒரிஜினல் படத்தின் ஆன்மா குலைந்து விடாதபடி, எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் இந்தப் படத்துக்கு தமிழ்த் தன்மையுடன் வசனம் எழுதியுள்ளேன். கண்டிப்பாக இது ரசிக்கப்படும்’ என்கிறார்.

இப்பட ரிலீஸ் சமயத்தில் விளம்பரங்களில் ஏ.ஆர்.முருகதாஸின் பெயர் பெருமளவில் முன்னிறுத்தப்படும் என்று தெரிகிறது. அச்சமயம் அவரது ஆங்கிலப்புலமை வலைதளங்களில் கண்டிப்பாக அலசி ஆராயப்படும்.

click me!