65 வருடம்... 85 வயதில்... கின்னஸ் உள்பட பல சாதனை படைத்த பி.சுசிலாவிற்கு பிரமாண்ட பாராட்டு விழா!

By manimegalai aFirst Published Mar 28, 2019, 1:13 PM IST
Highlights

இனிய குரல் குரலால் பல பாடல்களை பாடி, புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் பி.சுசிலா.  தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.
 

இனிய குரல் குரலால் பல பாடல்களை பாடி, புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் பி.சுசிலா.  தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.

1953ல் 'பெற்றதாய்' படத்தில் பாடகியாக அறிமுகமானார்.  "மறைந்திருக்கும் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன..  தமிழுக்கு அமுதென்று பேர்...  சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து...  என ரசிகர்கள் மனதில் அன்று முதல் இன்று வரை நீங்காத இடம்பிடித்துள்ள பல பாடல்களை பாடி புகழின் உச்சியில் இருப்பவர்.

இவரை கௌரவிக்கும் விதமாக, மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதை வழங்கியுள்ளது. மேலும் ஐந்து முறை தேசிய விருதுகளையும், 11 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சினிமாவுக்கு வந்து 65 வருடங்களை கடந்து விட்ட அவருக்கு தற்போது 84 வயதாகிறது. இவரின்  சாதனைகளை பாராட்டி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில், வருகிற மே 19 ஆம் தேதி அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

இதில் பல நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், பாடகர் பாடகி உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

click me!