Rajinikanth Temple: சூப்பர் ஸ்டாருக்கு 250 கிலோ சிலை! கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த ரஜினிகாந்த் ரசிகர்!

By manimegalai a  |  First Published Oct 27, 2023, 12:53 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 250 கிலோ எடை கொண்ட, 3 அடி சிலை வைத்து கோவில் கட்டி பிரதிஷ்டை செய்து வருகிறார் ரஜினிகாந்தின் ஆஸ்தான ரசிகர். இவரை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 


மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கார்த்திக் என்ற இளைஞர் திருமண தகவல் மையம் தொழில் நடத்தி வருகிறார்.  இவர் தீவிர ரஜினி ரசிகர் ஆவார் . வாடகை வீட்டில் வசித்து வரும் கார்த்திக்,  தனது வீட்டின் ஒரு அறையை ரஜினிக்கு கோவிலாக வடிவமைத்து, ரஜினியின் திரைப்படங்கள் அனைத்திலும் உள்ள காட்சிகளை அறையினுள் ஒட்டி வைத்தும் , நாள் தோறும் ரஜினிக்கு தீபாராதனை, அபிஷேகம் செய்து வரும் தீவிர ரஜினி பக்தராக மாறியுள்ளார்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் மூன்றடி உயரத்தில், 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட ரஜினிக்கு சிலை ஒன்றை செய்து, அந்த சிலைக்கு வேத விற்பன்னர்களால் யாகம் வளர்த்து கும்பாபிஷேகம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து , பூஜை முடிந்த பின்னர் அச்சிலையை எடுத்து கோவிலாக வழிபடும் அந்த அறையில் வைத்து, ரசிகரான கார்த்திக் பால், பன்னீர் , இளநீர், சந்தனம் , மஞ்சள் உள்ளிட்ட ஆறு வகை திரவியங்களால் அபிஷேகம் செய்து,  மாலை அணிவித்து தீபாராதனை நடத்தினார். அவருக்கு ஒரு உறுதுணையாக பெற்றோர்களும் அவரது மனைவியும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

5 வருடமாக படுத்த படுக்கையில் இருக்கும் இயக்குனர் விக்ரமனின் மனைவி! என்ன அச்சு? நெஞ்சை பதற வைக்கும் உண்மை!

இந்தியாவிலேயே உயிருடன் இருக்கும் நடிகர் ரஜினிக்கு கருங்கல்லினால் ஆன சிலையை அமைத்து,  நாள்தோறும் அதற்கு அபிஷேகமும் , தீபஆராதனைகளும் செய்து வரும் கார்த்திக்கின் செயல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

click me!