
கடந்த வியாழனன்று ரிலீஸாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் விஜய்சேதுபதி-த்ரிஷா காம்பினேஷனின் ’96 படம் சுடச்சுட தெலுங்கில் ரீமேக் ஆகிறது.
வியாழன் காலை முதலே இப்படத்தின் தெலுகு ரைட்ஸை வாங்குவதற்கு நடந்த போட்டியில் முன்னணி தயாரிப்பாளர் தில்ராஜ் வென்றார். வியாழன் அன்று ’96 படத்தின் காலைக்காட்சியை சென்னை திரையரங்கில் பிரபல நடிகர் ‘நான் ஈ’ நானியுடன் பார்த்த தில்ராஜ், படத்தை வாங்கப் போட்டியிட்ட அனைத்து தயாரிப்பாளர்களையும் பின்னால் தள்ளி உரிமையை பெரிய விலை கொடுத்து வாங்கினார்.
தெலுங்கில் இப்படத்தை இயக்க பிரேம் விருப்பம் தெரிவிக்காத நிலையில், இனிதான் இயக்குநர் யார் என்கிற முடிவை எடுக்கவேண்டும் என்றும் ஆனால் விஜய் சேதுபதியின் கேரக்டரில் உறுதியாக நானிதான் நடிக்கவிருக்கிறார் என்றும் இன்னும் சிறப்பாக நாயகிகள் யாரும் அமையாத பட்சத்தில் நாயகி ஜானுவாக அநேகமாக திரிஷாவே நடிக்கக்கூடும் என்றும் தில்ராஜ் தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.