
‘பேட்ட’ படத்தின் 50-வது நாள் – கேக் வெட்டி கொண்டாடிய டீம்!
இந்த ஆண்டு (2019) பொங்கல் ஸ்பெஷலாக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸான படம் ‘பேட்ட’. இந்த படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.
‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்திருந்த இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, மாளவிகா மோகனன், சனந்த் ரெட்டி, இயக்குநர்கள் சசிகுமார் – மகேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. அதுமட்டுமின்றி, இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 28-ஆம் தேதி) இப்படத்தின் 50-வது நாளை முன்னிட்டு ரஜினி, கார்த்திக் சுப்புராஜ், கலாநிதி மாறன், அனிருத் மற்றும் படக்குழுவினர் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.