3 முதல்வர்கள் விருப்பப்பட்ட கண்ணதாசன் மணிமண்டபம்...

 
Published : Jun 24, 2017, 02:09 PM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
 3 முதல்வர்கள் விருப்பப்பட்ட கண்ணதாசன் மணிமண்டபம்...

சுருக்கம்

3 chief minister like kannadasan

கண்ணதாசனுடன் நெருங்கி பழகிய மூன்று முதல்வர்கள் அவருடைய மணிமண்டபம் அமைவதிலும் இணைந்து நின்றது சுவாரஸ்யமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

கவிஞர் கண்ணதாசன், பெயரையே கவிதையாக கொண்டவர், இவரின் பாடல்களை  கேட்டு ரசிக்காத மனிதர்களே இல்லை என்கிற அளவிற்கு தன்னுடைய பாடல் வரிகளால் பலர் மனதை கொள்ளை கொண்ட மனிதர்.

கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது.

84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் ஜெயலலிதாவால்  திறந்து வைக்கப்பட்டது. 

இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

கண்ணதாசன் மணிமண்டபம் அமைய விருப்பப்பட்ட எம்ஜிஆர் கருணாநிதி இருவரும் கண்ணதாசனின் நெருங்கிய நண்பர்கள். ஜெயலலிதா கலைத்துறையில் இருந்தவர் என்ற முறையில் கண்ணதாசன் மேல் மிகுந்த மதிப்பு கொண்டவர்.

இம்மூவரும் கண்ணதாசனுக்கு மணிமண்டபம் அமைக்க விருப்பபட்டதும், ஒருவர் அறிவிக்க ஒருவர் துவங்கி வைக்க ஒருவர் திறந்து வைக்க என கண்ணதாசனின் மணிமண்டப விவகாரத்தில் மூவரும் இணைந்து விட்டது இயற்கையாகவே அமைந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வு எனலாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 மினிட்ஸ் பிக்பாஸ் என்று கேட்ட மகள்கள்: சந்தோஷத்தில் திகைத்து நின்ற சாண்ட்ரா! அழ வைக்கிறீங்களேப்பா!
ஹாலிவுட் லெஜண்ட் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த தரமான சம்பவம்... 'தி ஒடிஸி' டிரெய்லர் இதோ