
ரஜினி தர்பார் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கொஞ்சமாக ஆசைப்படுங்கள் என்று கூறியதற்கு இப்போது காரணம் தெரிய வந்திருக்கிறது.
முன்னுக்குப் பின் பேசுகிற விஷயத்தில் ரஜினியை அடிக்க ஆளே இல்லை. பின்வரும் செய்தியை படித்தால் விஷயம் எளிதில் புரிந்துவிடும். லைகா நிறுவனத்திற்கு இது டிஸ் ‘லைக்’காலம் போலிருக்கிறது. அடிக்கடி சி.இ.ஓ.,க்களை மாற்ற வேண்டிய நிலைமை. கம்பெனியின் தூண் போல செயல்பட்ட ஐங்கரன் கருணா மீது கமிஷன் பழி சுமத்தி விரட்டிய வகையில் சில பல சலசலப்புகள்.
இந்த நிலையில் ரஜினியின் சம்பளமான 100 கோடிக்கு கட்ட வேண்டிய ஜி.எஸ்.டி தொகை சுமார் 12 கோடியை கட்டாமலே விட்டுவிட்டார்களாம். வீட்டம்மாவே போன் செய்தும் நோ ரெஸ்பான்ஸ். பிறகு ரஜினியே தலைமை பீடத்திற்கு தகவல் சொல்லி 12 கோடியை கட்ட வைத்தாராம். கொஞ்சமா ஆசைப்படுங்க என்று தர்பார் பிரஸ்மீட்டில் ரஜினி பேசியதற்கும் இந்த சம்பவத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.