100 சதவீத வாக்குகள் போடப்பட்டதா நடிகர் சங்கத்தில்?

By manimegalai aFirst Published Jun 23, 2019, 5:48 PM IST
Highlights

பல்வேறு தடைகளை கடந்து, நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ஆம் தேதி அதாவது இன்று காலை 7 மணிக்கு புனித எப்பாஸ் பள்ளியில் துவங்கி மாலை 5 மணி முதல் நடந்து முடிந்தது.
 

பல்வேறு தடைகளை கடந்து, நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ஆம் தேதி அதாவது இன்று காலை 7 மணிக்கு புனித எப்பாஸ் பள்ளியில் துவங்கி மாலை 5 மணி முதல் நடந்து முடிந்தது.

இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும், இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிடுகின்றனர். இரு அணியை சேர்ந்தவர்களும், மற்றொரு அணியினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது நடிகர் சங்க தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

மொத்தம் 3644 பேர் உறுப்பினர்களாக உள்ள இந்த தேர்தலில், 3175 பேர் மட்டுமே வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். மேலும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நாடக நடிகர்கள் வெளியூர்களில் இருப்பதால் தங்களால் ஓட்டு போட முடியாது என்பதால் தபால் மூலம் தங்களுடைய வாக்குரிமையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்பட்ட நிலையில், சில நாடக நடிகர்கள் தபால் ஓட்டு கிடைக்கவில்லை என்பதற்காக நேரடியாக சென்னைக்கே வந்து தங்களுடைய வாக்கை பதிவு செய்ய வந்தனர்.

ஆனால் அவர்களுடைய விலாசம் வேறு ஊரில் இருப்பதாகக் கூறி அவர்களை வாக்களிக்க அதிகாரிகள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தபால் மூலம் ஓட்டுகள் போடப்பட்டதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

அதேபோல் அனைத்து நடிகர்களும் வாக்களித்தார்களா? குறிப்பாக அஜித், நடிகர் வடிவேலு, போன்ற நடிகர்கள் நடிகர் சங்க தேர்தலில் வாக்கு போட்டார்களா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. எனவே நடிகர் சங்கத்தில் நூறு சதவீத வாக்கு கிடைத்ததா இல்லையா என்பது குறித்த முடிவுகள் வெளியாகும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

click me!