தேர்தலின்போது மயங்கி விழுந்த மூத்த நடிகர்...திரும்பிக்கூடப் பார்க்காத பிரபலங்கள்...

By Muthurama LingamFirst Published Jun 23, 2019, 5:43 PM IST
Highlights

இந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அண்ட் கோவின் முக்கிய வாக்குறுதியே சங்கக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டவுடன் வயதான மூத்த நடிகர்களுக்கு முதியோர் இல்லம் கட்டிக்கொடுக்கப்படும் என்பதுதான். ஆனால் இன்று தேர்தலில் வாக்களிக்க வந்து மயங்கி விழுந்த 80  வயது முதியவரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. 
 

இந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அண்ட் கோவின் முக்கிய வாக்குறுதியே சங்கக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டவுடன் வயதான மூத்த நடிகர்களுக்கு முதியோர் இல்லம் கட்டிக்கொடுக்கப்படும் என்பதுதான். ஆனால் இன்று தேர்தலில் வாக்களிக்க வந்து மயங்கி விழுந்த 80  வயது முதியவரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. 

இது தொடர்பாக நடிகர் அபி சரவணன் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு இது,...தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்துவிட்டு திரும்பி வந்த நேரத்தில் தளபதி விஜய் சார் அவர்களும் வெளியே வர சரியான தள்ளுமுள்ளு....வயதான ஒருவர் மயங்கி கிடக்க... அருகே சென்று பார்த்தால் நடிகர் சங்க வாழ்நாள் உறுப்பினர் சேலம் சுந்தரம் ஜயா அவர்கள். எண்பத்தி எட்டு வயதில் ஓட்டளிக்க முதியோர் இல்லததில் இருந்து தனியாளாக பஸ்ஸில வந்தவர்.. வெயில் தாளாமல் மயங்கி சுருண்டு விழுந்து கிடந்தார்...

எந்த காரில் எந்த நடிகர் வருவார் என ஆவலாக ஓடி திரிந்த மீடியா காரர்களுக்கும், காமிரா கண்களுக்கும் இவர் தெரியவில்லை போல.
ஏன் பிரச்சாரத்தில் பரபரபபாய் இருந்த பலருக்கும் கூட தெரியவில்லை போல...உடனடியாக இரு அணியை சேர்ந்தவர்களும் தகவல் அனுப்பியும் பதில் கிடைக்காமல் சுந்தரம் ஜயா அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவசோதனை செய்து ஆசுவாசப்படுத்தி அவரது விருப்பத்தின் பேரில் போரூரில் உள்ள அவரது முதியோர் விடுதியில் கொண்டு பத்திரமாக சேர்த்த போது தான் நிம்மதி வந்தது.

நடிகர் சங்க தேர்ததலில் வாக்களித்துவிட்டு வரும்போதே அதே வளாகத்தில் மயக்கமுற்ற நலிந்த மூத்த கலைஞரை பத்திரமாக அவரது முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு படப்பிடிப்பிற்காக மீண்டும்வேலூரை நோக்கி பயணம்.நலிந்த கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி என வாக்குதிறுதி அளித்த அணி வெற்றி கொண்டு உண்மையாகவே உதவினால் நலம். Abi Saravanan

click me!