விஜய் வம்பை வான்டட் ஆக விலைக்கு வாங்குறார்: பட பப்ளிசிட்டிக்காக ஆளுங்கட்சியை சீண்டி எடுக்கும் ரிஸ்க்!

By Vishnu PriyaFirst Published Feb 18, 2020, 6:18 PM IST
Highlights

*வருமான வரித்துறை ரெய்டுக்குப் பின் தளபதி விஜய்யின் மதிப்பு தேசிய அளவில் எகிறி இருப்பது எல்லோரும் அறிந்ததே. இது அவருக்கு சினிமா ரீதியிலும் பெரிய அளவில் கைகொடுக்கிறது. 

*வருமான வரித்துறை ரெய்டுக்குப் பின் தளபதி விஜய்யின் மதிப்பு தேசிய அளவில் எகிறி இருப்பது எல்லோரும் அறிந்ததே. இது அவருக்கு சினிமா ரீதியிலும் பெரிய அளவில் கைகொடுக்கிறது. கடந்த 14-ம் தேதி லவ்வர்ஸ் டே அன்று வெளியான அவரது ‘மாஸ்டர்’ படத்தின் ‘ஒரு குட்டி கதை’ சிங்கிள் டிராக் எக்கச்சக்கமாய் டிரெண்டிங்கில் உள்ளது.  பதினேழாம் தேதி வரையில் ஒருகோடியே முப்பது லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதில் லைக்குகள் மட்டும் பனிரெண்டு லட்சம். (தொகுதி வாரியா கணக்கெடுங்கப்பா! எவ்வளவு ஓட்டு கிடைக்கும்னு ஒரு முடிவுக்கு வரலாம்)

*வளர்த்த கீரி, கையை கீறிவிட்டது! என்று துடிக்கிறார் நடிப்பு அசுரனான தனுஷ். யெஸ்! அவர் குத்திக் காட்டுவது சிவகார்த்திகேயனைதான். தனது ‘3’ படத்தின் மூலம் சிவகார்த்திக்கும் செம்ம ஜனரஞ்சக அந்தஸ்தை வாங்கிக் கொடுத்த தனுஷ், அதன் பின் அவரை வைத்து ‘எதிர்நீச்சல்! காக்கிச்சட்டை!’ என இரண்டு படங்கள் தயாரித்தார். எஸ்.கே.!வின் சினிமா கேரியரில் தனுஷின் பங்கு மிகப்பெரிது. 
ஆனால் கடந்த சில வருடங்களாக இருவருக்கு இடையிலும் ஒட்டுதல் இல்லை. இந்நிலையில் தனுஷ், அவரது அண்ணனின் இயக்கத்தில் ‘டாக்டர்ஸ்’ எனும் படத்தில் கமிட்டாகி, பின் அது கைவிடப்பட்டிருந்தது. இப்போது அந்த டைட்டிலை எடுத்து, ‘டாக்டர்’ என்றாக்கி சிவகார்த்தி நடிக்கிறார். தனுஷின் பட டைட்டிலைதான் சுட்டாரென்றால், நேற்று வெளியாகி இருக்கும் அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் தனுஷின் ‘டாக்டர்ஸ்’ போலவே இருக்கிறது. இதனால் வான்டட் ஆக தன்னிடம் சிவகார்த்தி வம்பிழுக்கிறார்! என கொதிக்கிறார் தனுஷ்.
(நம்ம கிட்ட டைட்டில் இருந்தாலும் புடுங்கிக்கிறானுவ சிதம்பரம்)

*ஜஸ்ட் ரெண்டே படத்தில் இந்திய பொண்ணுங்களின் கனவுக் கண்ணன் ஆனார் விஜய் சாய் தேவரகொண்டா. ஆனால் அதன் பின் நோட்டா, டாக்சிவாலா, டியர் காம்ரேட் ஆகிய மூன்றும் செம்ம அடி. அவரது பெரும் எதிர்பார்ப்பில் உருவான ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ படமும் கடந்த காதலர் தினத்தில் வெளியாகி, செம்ம அடி வாங்கியுள்ளது. கடுப்பின் உச்சத்தில் இருக்கிறார் விஜய். அதனால் ஆக்‌ஷன் ஸ்டோரிகளுக்கு மாறிவிட்டார் பையன். மேலும் டோலிவுட்டின் மிக சக்ஸஸ்ஃபுல் இயக்குநர்களுக்கு தொடர்ந்து போன் அடித்தும் வருகிறார். 
(ராஜமவுலி சார் கொஞ்சம் என்னான்னு கேளுங்களேன்!)

*ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவரது வாழ்க்கையை படமாக்குகிறேன் என்று கெளம்பிய இயக்குநர்களை பார்த்து ‘அம்மாவை அசிங்கப்படுத்திடாதீங்க. ப்ளீஸ்!’ என்று கோரிக்கை வைத்தது அ.தி.மு.க.வின் மிக முக்கிய தரப்பும், ஜெ.,வின் உறவுப்பெண்ணான தீபாவும். 
இந்த நிலையில் ‘தலைவி’ எனும் பெயரில் ஜெ., படத்தை எடுத்து வரும் ஏ.எல்.விஜய், அப்படத்தில்  ஷோபன் பாபு கேரக்டரையும் வைத்துள்ளார். இந்த கேரக்டரில் நடிப்பதற்கு பெங்காலி நடிகர் ஜிஷூ சென்குப்தா என்பவரையும் புக் செய்துவிட்டார். ஜெ., வாழ்க்கை படத்தில் இந்த கேரக்டரை கொண்டு வந்தால் அ.தி.மு.க்.அ எதிர்ப்பு  வெடிக்கும் என்பது இயக்குநர் ஏ.எல்.விஜக்கு நன்றாகவே தெரியும். அதை மீறியும் கொண்டு வர காரணமே பப்ஸிசிட்டிக்காதான்! என்கிறார்கள். (பாறையில கிடந்த பல்லியை தூக்கி பாக்கெட்டுக்குள்ளே போடுற மேன்)

*ரஜினி படத்தில் ஆக்‌ஷன், ஸ்டைலுக்கு இணையாக காமெடியும் களைகட்டும். ஆனால் சந்திரமுகிக்கு பின் கடந்த சில படங்களாக அது மிஸ்ஸிங். எனவே இப்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் அதை பெரிதாய் எதிர்பார்க்கிறார் ரஜினி. டபுள் ஓ.கே. சொன்ன இயக்குநரோ சூரியை கொண்டு வந்து நிறுத்தினார். ரஜினிக்கு லேசாய் நம்பிக்கை தகர்ந்தது. இப்போது ஷூட் போய்க் கொண்டிருக்கும் நிலையில், சூரியின் ஸ்டீரியோ டைப் ரியாக்‌ஷன்களைப் பார்த்து ரஜினியால் பெரிதாய் காமெடி பர்ஃபார்மென்ஸை கொடுக்க முடியலையாம். இந்த இடத்தில் வடிவேலு இருந்திருந்தால்! என வெளிப்படையாகவே ஃபீல் பண்ணுறாராம். (ஹும் என்னத்த சொல்ல? மாப்புதான் தனக்குதானே  வெச்சுக்கிச்சே ஆப்பு!)
 

click me!