
காமெடி நடிகர் பரோட்டா சூரி 10 ஆண்டு சேலஞ்ச் போட்டோவை ட்விட்டரில் போட்டு அசத்தி வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த போது கிராமத்து சாயலில் இருந்த சூரி, சிக்பேக் உடல்வாகில் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.
பொதுவாக திரைப்படங்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்கத் தெரியாத அவர் ஆங்கிலத்தில் ‘’ 10 ஆண்டு சேலஞ்ச். வெண்ணிலா கபடி குழு படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் சசீந்திரனுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவிற்கு பாராட்டுகளும், கலாய்ப்புகளுமாக கமெண்டுகள் குவிக்கின்றன. ’’இங்கல்லாம் நல்லா இங்கிலீஸ் பேசுறீங்க. படத்துல ஏன் தப்பு தப்பா பேசுறீங்க. ப்பா.. பிரதர் செம்ம்ம்ம்ம்ம்ம. காமெடி வராட்டியும் பாடி ஃபிட்னஸ்ல மாஸ் காட்றிங்க. எப்படி இருந்த நீங்க இப்படி ஆக்கிட்டீங்க, துரை இங்கிலிஷ் எல்லாம் பேசுது. அண்ணே இது வேற யாரோ தானே டைப் பண்ணி கொடுத்தாங்க. ஜான் ஆப்ரஹாம் மாதிரி ஆயிட்டீங்க.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.