சிவகார்த்தியை காப்பியடித்த தனுஷ்: ஒர்க் அவுட் ஆகுமா சென்டிமெண்ட்?

By Vishnu PriyaFirst Published Feb 11, 2020, 6:11 PM IST
Highlights

பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் விரும்பி நடிக்கும் ‘கர்ணன்’ படமானது, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வியல் பிரச்னை சம்பந்தமானது! என்கிறார்கள். 

*பெரியா பெரியா பஞ்சாயத்துகளுக்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு துவங்குகிறது. இப்படத்தில் ‘அப்துல் காலிக்’ எனும் முஸ்லிம் இளைஞர் வேடத்தில் நடிக்கிறார் சிம்பு. ’எம்மதமும் எனக்கு சம்மதம்’ என்று புல்லரிக்க வைக்கிறார்.

*உலக காதலர் தினத்தன்று விஜய் சாய் தேவரகொண்டாவின் ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ படம் ரிலீஸாகிறது. இந்தப் படத்தோடு காதல் படங்களை ஏறக்கட்டுகிறார் தேவரகொண்டா. இனி ஆக்‌ஷன் உள்ளிட்ட வேறு தள படங்களில் நடிக்க இருக்கிறாராம். அதனால்தான் இந்தப் படத்துக்காக மொத்த லவ்வையும் கொட்டி தீர்த்துவிட்டாராம். இதை தேவுவே சொல்லியிருக்கிறார். அப்ப சரிதான்!

*போர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கை வெளியிட்டுள்ள, முப்பது வயதுக்கு உட்பட பிரபலங்கள் பட்டியலில் சாய் பல்லவி இருபத்து ஏழாவது ஆளாக இடம் பெற்றுள்ளார். வேறு எந்த தென்னிந்திய நடிகையும் இப்பட்டியலில் இல்லை. 
இது தனக்கு கிடைத்த பெருமையாக சாய் பல்லவி கூறிக் கொண்டிருக்க, சாய் பல்லவியின் சொந்த ஊரான நீலகிரி மாவட்டத்தினை சேர்ந்த அவரது சமுதாய பெரியவர்களோ அதை விமர்சித்தும், எதிர்த்தும் பேசுகிறார்கள். ஏன் பாஸு?!

*மாதவனுடன் அறிமுகமான இறுதிச்சுற்று ரித்திகா சிங், விஜய்சேதுபதி மற்றும் லாரன்ஸையெல்லாம் கடந்து இப்போது அசோக் ஷெல்வனுடன் நடிக்குமளவுக்கு ஆகிவிட்டார். இந்த நிலையில், இந்த ஓ மை கடவுளே! எனும் புதுப்படத்தில் ஹீரோவை டார்ச்ச்சர் செய்யும் பெண்ணாக நடித்துள்ளாராம். மேலும், இனி சினிமாவில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடிப்பதில்லை எனும் முடிவை எடுத்துள்ளார். 
அப்படி குத்து!

*பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் விரும்பி நடிக்கும் ‘கர்ணன்’ படமானது, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வியல் பிரச்னை சம்பந்தமானது! என்கிறார்கள். இந்நிலையில், இப்படத்திற்கு சிவாஜி கணேசனின் மெகா காவியமான கர்ணன் படத்தின் பெயரை வைக்க கூடாது! என்று சிலர் குரல் கொடுத்தனர். இதனால் இப்படத்தின் பெயரை ‘நம்ம வீட்டு கர்ணன்’ என்று மாற்றும் முடிவில் உள்ளனராம். எப்படி...சிவகார்த்தியின் ‘எங்கள் வீட்டு பிள்ளை’ நம்ம வீட்டு பிள்ளை ஆன மாதிரியா?
-    
 

click me!