கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு… மதிப்பெண்கள் குறித்து முழு விவரம் உள்ளே!!

By Narendran SFirst Published Nov 30, 2022, 12:11 AM IST
Highlights

தமிழகத்தில் உள்ள காலியாக உள்ள 2 ஆயிரத்து 748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானதை அடுத்து தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இதனிடையே டிச.4 ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இப்பணிக்கான தேர்வு நடைபெறவுள்ளது. 

தமிழகத்தில் உள்ள காலியாக உள்ள 2 ஆயிரத்து 748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானதை அடுத்து  தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இதனிடையே டிச.4 ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இப்பணிக்கான தேர்வு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) வாயிலாக, அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்வது தொடர்பான விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதார்கள், குறுஞ்செய்தி (SMS) வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இணைய பக்கத்தை பயன்படுத்தி அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கிராம உதவியாளர் பணியிடங்கள்: உத்தேச தேர்வு கால அட்டவணை 

அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி 10.10.2022
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி தேதி 7.11.2022
விண்ணப்பபங்கள் சரிபார்ப்பு 14.11.2022
எழுத்து மற்றும் வாசித்தல் தேர்வு 04.11.2022 (ஞாயிற்றுக்கிழமை )
நேர்காணல் தேர்வு 15.12.2022 மற்றும் 16.12.2022வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை
தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் மற்றும் நியமன ஆணைகள் வழங்கும் தேதி 19.12.2022திங்கட்கிழமை

தெரிவு முறை: 

கல்வித் தகுதி மதிப்பெண்கள்
9ம் வகுப்பு வரை தேர்ச்சி 5
12ம் வகுப்பு/டிப்ளமோ/ஐடிஐ தேர்ச்சி 7
இதர உயர்கல்வி மேற்படிப்புகளுக்கு 10

வண்டி ஓட்டும் திறன்:  உயர் அளவாக 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

மிதிவண்டி ஓட்டும் திறன் 5 மதிப்பெண்
இரண்டு சக்கர வாகன உரிமை வைத்திருந்தால் 7 மதிப்பெண்
நான்கு சக்கர வாகன உரிமை வைத்திருந்தால் 10 மதிப்பெண்

எழுதுதல் மற்றும் வாசித்தல் திறன்: உயர் அளவாக 40 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

இதையும் படிங்க: திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

வாசித்தல் திறன் (எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம்) 10 மதிப்பெண்
எழுத்து தேர்வு:   ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம் 30 மதிப்பெண்

இருப்பிடம் : இதற்கு உயர் அளவாக 25 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் கிராம வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்தால் 25
விண்ணப்பிக்கும் தாலுகா வட்ட எல்லைக்குள் நிரந்தரமாக வசிப்பவராக இருந்தால் 20

எழுத்துத் தேர்வு: இந்த எழுத்துத் தேர்வை மேற்பார்வையிட, ஒவ்வொரு தாலுகாவிற்கும் துணை ஆட்சியர் பிரிவில் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

100 வார்தைகளுக்கு மிகாமல் கிராமத்தின் விவரம், நிலங்கள்  ( உதாராணமாக பதிவுத்துறை என்றால் என்ன , வருவாய்த்துறை என்றால் என்ன,  பட்டா என்றால் என்ன? சிட்டா என்றால் என்ன? அடங்கல் என்றால் என்ன? )அல்லது கிராமத்தின் வகைப்பாடு (நஞ்சை, புன்செய்)  அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் விரும்பும் தலைப்பில் இருந்து கேள்விகள் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தேர்வுக்கு  தாயாரகி வருபவர்கள் மேலே பரிந்துரைக்கும் தலைப்புகளில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க: திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

வாசித்தல் தேர்வு என்பது ஏதாவதொரு தரமான புத்தகத்தில் இருந்து தோராயமாக ஒரு சில பத்தியைப் படிக்கும் படி கேட்கப்படும்.
வாசித்தல் திறனுக்கு உயரளவாக 10 மதிப்பெண்களும், எழுத்து திறன் தேர்வுக்கு உயரளவாக 30 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

நேர்காணல் தேர்வு: உயர் அளவாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஊழல், லஞ்சம், மோசடிகள் போன்றவற்றை ஏற்கக் கூடாது என்பதற்காகவே நேர்காணல் தேர்வுக்கான உயர் அளவு மதிப்பெண் வெறும் 15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தாலுகா அளவில், தாசில்தார், சிறப்பு தாசில்தார், ஏதேனும் இணை தாசில்தார் என 3 அதிகாரிகளின் முன்னிலையில் இந்த நேர்காணல் தேர்வு நடைபெறும். மூன்று பேரும், தனித்தனியாக மதிப்பெண் வழங்கி, அந்த மூன்றின் சராசரி மதிப்பெண்கள் மட்டுமே விண்ணப்பித்தாரர்களுக்கு அளிக்கப்படும். எந்தவித விதிமீறலும் இல்லாமல் இருப்பதற்காக இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. இதன் காரணமாக, சிலருக்கு கூடுதலாக மதிப்பெண் வழங்குவது, ஒருதலைபட்சமாக செயல்படுவது ஓரளவுக்கு தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெரிவு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் அந்தந்த மாவட்ட ஆட்சியரின் இணையத்தளத்தில் முழு விவரங்களுடன் வெளியிடப்படும்.

click me!