வேலையில்லா இளைஞர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.. 581 காலி பணியிடங்கள் - முழு தகவல்கள் இதோ

By Raghupati R  |  First Published Dec 28, 2022, 3:53 PM IST

தெலுங்கானா மாநில பொதுப் பணியாளர் தேர்வாணையம் 581 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.


தெலுங்கானா மாநில பொதுப் பணியாளர் தேர்வாணையம் (TSPSC) விடுதி நல அலுவலர் Gr-I, விடுதி நல அலுவலர் Gr-II, வார்டன் Gr-I, வார்டன் Gr-II, Matron Gr-I, Matron ஆகிய பதவிகளுக்குத் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க உள்ளது.

பழங்குடியினர் நலத் துறை, பட்டியல் சாதி மேம்பாட்டுத் துறை, BC நலத் துறை மற்றும் ஊனமுற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல இயக்குநர் ஆகியவற்றில் மொத்தம் 581 காலியிடங்கள் உள்ளன.

Tap to resize

Latest Videos

கல்வித்தகுதி :

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் நிறுவப்பட்ட அல்லது இணைக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளா..? பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக்கல்வித்துறை

விண்ணப்பிப்பது எப்படி? :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 06 ஜனவரி முதல் 27 ஜனவரி 2023 வரை TSPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்ப செயலாக்க கட்டணம் ரூ.200 மற்றும் தேர்வு கட்டணம் ரூ. 80 ஆகும். இதில் அனைத்து வேலையில்லாதவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து அரசு ஊழியர்களும் (மத்திய / மாநிலம் / பொதுத்துறை நிறுவனங்கள் / பெருநிறுவனங்கள் / பிற அரசுத் துறைகள்) நிர்ணயிக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும், மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

TNPSC : போட்டி தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி சொன்ன குட் நியூஸ்.. குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள்

click me!