தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) தமிழ்நாட்டில் பயிற்சியாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 30ம் தேதிக்குள் அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைப்பின் பெயர் : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT)
பணி : பயிற்சியாளர்
மொத்த காலியிடங்கள் : 97
சம்பளம் : ரூ. 35,600 – 1,12,800/- மாதத்திற்கு
வேலை இடம் : தமிழ்நாடு
விண்ணப்பக் கட்டணம் : இல்லை.
தேர்வு முறை : தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30 டிசம்பர் 2022
அதிகாரப்பூர்வ இணையதளமான sdat.tn.gov.in மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட படத்தை வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் பெயர், பிறந்த தேதி, முகவரி, மின்னஞ்சல் ஐடி போன்ற ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் சரியாக பதிவிட வேண்டும். விண்ணப்பக் கட்டணங்களை ஆன்லைன் முறையில் அல்லது ஆஃப்லைன் முறையில் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.