
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பதவிகளில் காலியாக உள்ள 1,083 பணியிடங்களை நிரப்ப மே 27ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
பணிகள் விவரம்:
* பணி மேற்பார்வையாளர் / இளநிலை வரைத்தொழில் அலுவலர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 794
* இளநிலை வரைத்தொழில் அலுவலர் - நெடுஞ்சாலைத் துறை - 236
* இளநிலை வரைத்தொழில் அலுவலர் - பொதுப்பணித் துறை - 18
* வரைவாளர், நிலை-III - நகர் ஊரமைப்பு துறை - 18
* முதலாள், நிலை-II - தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை - 25
மொத்த பணியிடங்கள் :
1083
மாத ஊதியம் விவரம், வயது வரம்பு:
* பணி மேற்பார்வையாளர் / இளநிலை வரைத்தொழில் அலுவலர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - ரூ.35,400-1,30,400/- உச்ச வயது வரம்பு இல்லை
* இளநிலை வரைத்தொழில் அலுவலர் - நெடுஞ்சாலைத் துறை - ரூ.35,400-1,30,400/- (வயது 35)
* இளநிலை வரைத்தொழில் அலுவலர் - பொதுப்பணித் துறை -ரூ.35,400-1,30,400/- (வயது 37)
* வரைவாளர், நிலை-III - நகர் ஊரமைப்பு துறை - ரூ.35,400-1,30,400/- (வயது 37)
* முதலாள், நிலை-II - தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை - ரூ.19500-71900/- உச்ச வயது வரம்பு இல்லை
விண்ணப்பக் கட்டணம்:
* நிரந்தரப் பதிவுக்கட்டணம் - ரூ.150
* தேர்வுக் கட்டணம் - ரூ.100
தேர்வுக் கட்டண சலுகை:
ஆதிதிராவிடம், பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள்- கட்டணம் செலுத்த தேவையில்லை
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு எழுத்துத் தேர்வு, கணினி வழி தேர்வு ,நேர்காணல்/ வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையங்கள் :
சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோவில், உதகமண்டலம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், காரைக்குடி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
www.tnpsc.gov.in - ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
04.03. 2023