தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 731 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்தப் பதவிகளுக்கு 17 டிசம்பர் (இன்றே கடைசி) விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கூடுதல் தகுதியுடன் B.V.Sc., பட்டம் உள்ளிட்ட சில கல்வித் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கான தகுதி / வயது வரம்பு / கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தேர்வு முறை :
இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு என்பது உள்ளிட்ட இரண்டு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படும்.
(i) தேர்வு (கணினி அடிப்படையிலான சோதனை முறை)
(ii) நேர்காணல்
CBT தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்கள் மற்றும் நியமனங்களின் இடஒதுக்கீடு விதிக்கு உட்பட்டு வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இறுதித் தேர்வு செய்யப்படும்.
வெளியானது தமிழ்நாடு உதவி வனப் பாதுகாவலர் பணிக்கான அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 17 டிசம்பர் (இன்று கடைசி நாள்)
கால்நடை உதவி மருத்துவர் : 731 பணியிடங்கள்
சம்பள விவரம் : ரூ.56,100 முதல் 2,05,700
கல்வி தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் ( Bachelor in Veterinary Science) கால்நடை மருத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு மாநில கால்நடை கவுன்சிலின் மருத்துவராக பணியாற்ற பதிவு செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி ? :
உதவி கால்நடை மருத்துவர் பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி-யில் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்கும் வேண்டும். விண்ணப்பிக்கப் பதிவு கட்டணமாக ரூ.150/- மற்றும் தேர்வு கட்டணமாக ரூ100/- ஆன்லைனில் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு (www.tnpsc.gov.in) இந்த அதிகாரபூர்வ தளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.