2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு மே 7 ஆம் தேதிநடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் ( பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்தா), ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. நாடு முழுவதும் 2022ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை எழுத நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்தனர்.
2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. எனினும் விண்ணப்பப் பதிவு எப்போது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. விண்ணப்பப் படிவம் வெளியான உடன், தகுதியான தேர்வர்கள் nta.ac.in மற்றும் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
நீட் தேர்வில் பொதுவாக இயற்பியியல், வேதியியல் உயிரியல் மற்றும் கணிதம் அல்லது எலக்டிவ் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். கல்வித் தகுதி, பாடத்திட்டம், தகுதி மற்றும் பிற தேவையான விவரங்களை என்டிஏ விரைவில் வெளியிட உள்ளது. முன்னதாக டிசம்பர் 15 அன்று, 2023-24 கல்வியாண்டுக்கான தேர்வு காலண்டரை சில முக்கிய தேர்வுகளின் பட்டியல் தேதிகளை என்டிஏ வெளியிட்டது.
என்டிஏ வெளியீட்டின்படி, CUET 2023 மே 21 முதல் 31, 2023 வரையிலும், ஜூன் 1 முதல் ஜூன் 7, 2023 வரையிலும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) அகில இந்திய நுழைவுத் தேர்வு (AIEEA) 2023 தேர்வு ஏப்ரல் 26, 27, 28 மற்றும் 29, 2023 ஆகிய தேதிகளில் நடைபெறும். JEE முதன்மை அமர்வு 1 தேர்வு ஜனவரி 24, 25, 27, 28, 29, 30 மற்றும் 31, 2023 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
அதே நேரத்தில் JEE முதன்மை அமர்வு 2 தேர்வு திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 6, 7, 8, 9, 10, 11 மற்றும் 12, 2023 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (என்டிஏ) வரும் மே 7 அன்று தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை (NEET UG) 2023 ஐ நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியானது தமிழ்நாடு உதவி வனப் பாதுகாவலர் பணிக்கான அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி?