TNPSC Exam: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய செய்தி.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

By Raghupati R  |  First Published Mar 7, 2023, 12:50 PM IST

டிஎன்பிஎஸ்சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி (TNPSC)  தேர்வுக்கு நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது.

குறிப்பாக நடப்பு ஆண்டு (2023) மூலமாக குறைவான காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மிகவும் கடுமையாக போட்டிக்கு நடுவே போட்டித்தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

அதன்படி,  மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வுகள் 20.04.2023 மற்றும் 03.05.2023 அன்று கணினி வழித் தேர்வு முறையில்(Computer Based Test) நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “'தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட வனப் பாதுகாவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் கணினி வழித்தேர்வாக (Computer Based Test) நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வேலைவாய்ப்பு.. 281 காலியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி.?

இதன் காரணமாக ஏப்ரல் 09 ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்ட கல்வி அலுவ பதவிக்கான முதல்நிலைத் தேர்வு 20 ஆம் தேதியும், 30 ஆம் தேதி நடைபெறவிருந்த உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதியும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலே கூறப்பட்டுள்ள இரண்டு தேர்வுகளுக்கும் முதல்நிலைத் தேர்வுக்கான தேதி மற்றும் தேர்வு மையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தேர்வாணைய இணையதளத்தில் திருத்தமாக (CORRIGENDUM - மாவட்டக் கல்வி அலுவலர், உதவி வனஅலுவலர் ) வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. போட்டித்தேர்வர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு.... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

click me!