இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ், ஆயுர்வேதா உட்பட இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது.
இந்தியாவில் 2023ஆம் ஆண்டிற்கான இளங்கலை நீட் தேர்வுக்கு (NEET UG) இன்று முதல் இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ், ஆயுர்வேதா உட்பட இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை எழுதுவோர் மட்டுமே இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேர முடியும். ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை என்டிஏஎனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
* விண்ணப்பப் படிவம் வெளியான உடன், தகுதியான தேர்வர்கள் nta.ac.in அல்லது neet.nta.nic.in ஆகிய இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
* Candidate Activity என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* அதில் NEET UG 2023 registration link என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* அங்கு திறக்கப்படும் பக்கத்தில் தேர்வர்களின் விவரங்களைப் பூர்த்தி செய்து, ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யவும்.
* விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி படிவத்தைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நீட் தேர்வு தேதி;-
2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது.