தபால் துறை அறிவித்துள்ள பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பில் பத்தாம் வகுப்பு முடிந்தவர்களுக்கும் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.
தமிழக தபால் துறையில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணபிக்க முடியும் என்பது குறிப்பித்தக்கது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு தபால் துறை மண்டலங்களில் ஓட்டுநர் வேலை காலியாக உள்ளது. இந்தக் காலிப் பணியிடங்களில் ஆட்களை நியமிக்க அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலி இடங்கள் எண்ணிக்கை:
மண்டல வாரியாக மொத்தம் 58 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சென்னை மண்டலத்தில் 6, மத்திய மண்டலத்தில் 9, சென்னை எம்.எம்.எஸ். (MMS Chennai) சேவையில் 25, தெற்கு மண்டலத்தில் 3, வடக்கு மண்டலத்தில் 15 என மொத்தம் 58 ஓட்டுநர் பணி இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி: இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். குறிப்பாக, கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் (லைசென்ஸ்) கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
TN Forest Recruitment: கை நிறைய சம்பளத்துடன் தமிழ்நாடு வனத்துறை வேலை! விண்ணப்பிக்க ரெடியா?
வயது வரம்பு என்ன?:
18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். SC / ST பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தால் 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு அளிக்கப்படுகிறது.
ஊதியம் எவ்வளவு?
தபால் துறை ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பதாரரின் திறமை மற்றும் அனுபவம் மற்றும் நியமிக்கப்படும் பணி இடம் உள்ளிட்ட பல காரணிகளைக் கருத்தில் கொண்டு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் கொடுக்கப்படும்.
தேர்வு எப்படி?:
அஞ்சல்துறை ஓட்டுநர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்று, தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி இல்லை. தபால்துறையின் https://www.indiapost.gov.in என்ற இணையளத்தில் இருந்து விண்ணப்பத்தை டவுன்லோட் செய்துகொள்ளலாம். அல்லது கீழே கொடுத்துள்ள இணைப்பை கிளிக் செய்து நேரடியாக விண்ணப்பத்தை டவுன்லோட் செய்துகொள்ளலாம். இந்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களையும் தவறாமல் இணைத்து அனுப்பலாம்.
நிரப்பிய விண்ணப்பத்தை அனுப்பவேண்டிய முகவரி:
The Senior Manager (JAG),
Mail Motor Service,
No.37, Greams Road,
Chennai – 600006
விண்ணப்பிக்க கடைசி தேதி:
மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். தபால் துறையில் ஓட்டுநராகப் பணியாற்ற விருப்பமும் தகுதியும் உள்ள ஆர்வலர்கள் தங்கள் விண்ணப்பித்தை கவனமாகப் பூர்த்தி செய்து மார்ச் 31, 2023 அன்று மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பலாம்.
இந்த வேலை வாய்ப்பு முழுமையான தகவல்கள் அனைத்தும் இந்த விண்ணப்பப் படிவத்துடனேயே இணைக்கப்பட்டுள்ளன. எந்தெந்த மண்டலங்களில் எந்தெந்த ஊர்கள் இடம்பெறுகின்றன. அவற்றில் உள்ள காலி இடங்கள் எத்தனை என்ற அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் பல தகவல்களும் விரிவாகத் தரப்பட்டுள்ளன.