தமிழக அரசு வனத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
அரசு வேலையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தமிழக அரசின் வனத்துறை வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை, கல்வித்தகுதி, வயது வரம்பு, கட்டணம் ஆகியவை பற்றிய விவரங்களையும் பார்க்கலாம்.
காலி இடங்கள்:
undefined
தமிழக அரசு வனத்துறையில் காலியாக உள்ள 6 பணி இடங்களை நிரப்ப அறிவிப்பை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. இதில் இருவேறு நிலைகளில் முறையே 4 மற்றும் 2 பணி இடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 28 ஆகும். அதாவது, மார்ச் 1, 2023 அன்று 28 வயதுக்குள் உள்ளவராக இருந்தால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ஒரே மதிப்பெண் பெற்றவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால் வயது மூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.
கல்வித்தகுதி
தாவரவியல், காட்டுயிரியல் போன்ற துறைகளில் எம்.எஸ்சி. படித்து குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அழைக்கப்பட்டுள்ளனர். NET, GATE, ICAT, DBT போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. வனத்துறை இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து அஞ்சலில் அனுப்பவேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 13ஆம் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பத்தை அனுப்பிவைக்கலாம்.
https://www.forests.tn.gov.in/ அல்லது https://www.aiwc.res.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பத்தை டவுன்லோட் செய்யலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்துடன் இந்த வேலைவாய்ப்பு பற்றி முழுமையான தகவல்களும் அடங்கி இருக்கின்றன.
Advanced Institute for Wildlife Conservation, Vandalur - Recruitment of Junior Research Fellow