கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய அறிப்பை ஒன்றை வங்கி வெளியிட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்று கனரா வங்கி. கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இந்த வங்கி செயல்படுகிறது. தற்போது இந்த வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: Group Chief Risk Officer, Chief Digital Officer and Chief Technology Officer
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
கனரா வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து horecruitment@canarabank.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
10ம் வகுப்பு படித்தால் போதும்.. மாதம் ரூ.15,000 சம்பளத்தில் காத்திருக்கிறது தமிழக அரசு வேலை !!
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதார்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் நாளை (06.03.2023) மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு வங்கி வெளியிட்டுள்ளா அதிகாரபூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு.... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!