TNPSC புதிய அறிவிப்பு.. சிறை அலுவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு தேதி வெளியீடு.. எப்படி விண்ணப்பிப்பது..?

Published : Sep 14, 2022, 04:01 PM ISTUpdated : Sep 15, 2022, 02:03 PM IST
TNPSC புதிய அறிவிப்பு.. சிறை அலுவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு தேதி வெளியீடு.. எப்படி விண்ணப்பிப்பது..?

சுருக்கம்

டிஎன்பிஎஸ்சி  தற்போது தமிழக சிறைகள்‌ மற்றும்‌ சீர்திருத்தத்‌ துறையில் காலியாக உள்ள சிறை அலுவலர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   

காலி பணியிடங்கள்: 8

பணியின் பெயர் :  சிறை அலுவலர்

பணியின் விவரம்: 

சிறை அலுவலர் (ஆண்கள்) - 6

சிறை அலுவலர் (பெண்கள்) - 2

விண்ணப்பிக்கும் தேதி: 

இப்பணிகளுக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் அக்டோபர் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

www.tnpsc.gov.in,www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க:போக்குவரத்து கழகத்தில் NCRTCயில் சூப்பர் வேலை.. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணப்பிப்பது..? விவரம் இதோ..

கல்வித் தகுதி: 

விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு துறையில்‌ பட்டம்‌ பெற்றிருக்க வேண்டும்‌. குற்றவியல்‌ மற்றும்‌ குற்றவியல்‌ நீதி நிர்வாகம்‌ மற்றும்‌ சமூகப்‌ பணியில்‌ முதுகலைப்‌ பட்டம்‌ பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர் வயது 32க்குள் இருக்க வேண்டும்.  மேலும் எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி மற்றும்‌ அனைத்து வகுப்புகளையும்‌ சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயவரம்பு இல்லை என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்‌ சம்பளமாக ரூ.38,900 - ரூ.1,35,100 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

இப்பணிக்கு எழுத்துத்‌ தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யபடவுள்ளனர். டிசம்பர் 22 ஆம் தேதி முற்பகல்‌ 9.30 முதல்‌ பிற்பகல்‌ 12.30 வரை தாள்‌-1க்கான தேர்வும்‌, பிற்பகல்‌ 2.30 முதல்‌ 5.30 வரை தாள்‌-2க்கான தேர்வும்‌ நடைபெறுகிறது.

மேலும் படிக்க:ரூ. 1 லட்சம் சம்பளத்தில் சென்னையில் மத்திய அரசு வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரங்கள் இதோ..
 

PREV
click me!

Recommended Stories

Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now