கூட்டுறவு சங்கங்களில் காலியாக இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் உள்ளிட்ட 15 இடங்களை நிரப்பவதற்கு டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பணியிடங்களுக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர் வரும் அக்.14 ஆம் தேதி வரை tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் அக்டோபர் 19 முதல் 21ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான குரூப் 3 ஏ தேர்வு அடுத்த வருடம் ஜனவரி 28 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.
மேலும் படிக்க:IAS,IPS, IFS பதவிகளுக்கான டிஎன்பிஎஸ் தேர்வு தேதி மாற்றம்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட TNPSC ..
14 பணியிடங்கள் காலியாக இளநிலை ஆய்வாளர் பதவிக்கு 18 முதல் 37 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அதே போன்று ஒரு பணியிடம் மட்டும் காலியாக உள்ள பண்டக காப்பாளர் பதவிக்கு 18 முதல் 32 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இட ஒதுக்கீட்டின் படி வயது தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் சான்றிதழ் சரிப்பார்ப்புக்கான விண்ணப்பத்தாரர்களின் தற்காலிக பட்டியல் அறிவிக்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர், தகுதியானவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.tnpsc.gov.in/English/Notification.aspx என்ற இணைப்பை பயன்படுத்தி அறிவிப்பினை தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க:TNPSC புதிய அறிவிப்பு.. சிறை அலுவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு தேதி வெளியீடு.. எப்படி விண்ணப்பிப்பது..?