ஆதார் துறையில் ஆண்டுக்கு ரூ.22 லட்சம் சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. விவரம் இங்கே !!

By Thanalakshmi V  |  First Published Sep 15, 2022, 5:48 PM IST

இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) கீழ் ஸ்மார்ட் அரசாங்கத்திற்கான தேசிய நிறுவனம் (NISG) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. 
 


நிறுவனத்தின் பெயர்: UIDAI

காலி பணியிடங்கள்: பல்வேறு இடங்கள் காலியாக உள்ளன. 

Tap to resize

Latest Videos

பணியின் பெயர்: Manager

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ளவர் அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை    

அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் சமர்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க:ரூ. 1.80 லட்சம் சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலை.. பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்..

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் B.E./ B.Tech / BBA / BCA / MCA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 8 முதல் 12 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.22 லட்சம் ஆண்டு ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். 

மேலும் படிக்க:NIEPMD தேசிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. ரூ.44,000 சம்பளத்தில் அரசு பணி.. விவரம் இங்கே
 

click me!