கவனத்திற்கு !! முக்கிய செய்தி.. குரூப் 1 தேர்வில் விண்ணப்பிக்க கல்வி தகுதி, வயது வரம்பு..? வெளியான அறிவிப்பு

By Thanalakshmi V  |  First Published Jul 21, 2022, 11:16 AM IST

குரூப்1 தேர்வு அறிவிப்பானையை அரசு பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள 91 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் குரூப் 1 தேர்வில் விண்ணப்பிப்பதற்கு தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
 


குரூப்1 தேர்வு அறிவிப்பானையை அரசு பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள 91 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் குரூப் 1 தேர்வில் விண்ணப்பிப்பதற்கு தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.குரூப்1 தேர்வு அறிவிப்பானையை அரசு பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள 91 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படவுள்ளது. குடிமை பணி, காவல் பணி, வணிகவரிப் பணி, கூட்டுறவுப் பணி, பொதுப்பணித்துறை ஆகியவற்றில் உள்ள துணை ஆட்சியர், துணை காவலர், உதவி ஆணையர் , துணை பதிவாளார், உதவி இயக்குநர் , மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளன.

குரூப் 1 முதல் நிலைத் தேர்வு  அக்டோபர் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-1 தேர்வுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணங்களின் திருத்தம் மேற்கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் TNPSC யின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்க  வேண்டும்.மேலும் இந்த தேர்வில் விண்ணப்பிக்க கல்வித்‌ தகுதியாக, வணிகம்‌ மற்றும்‌ சட்டம்‌ இரண்டிலும்‌ பட்டம்‌ பெற்றவராக இருக்க வேண்டும். வரி விதிப்பு சட்டங்களில்‌ டிப்ளமோ, வணிகம்‌ அல்லது சட்டத்‌ துறையில்‌ பட்டம்‌ பெற்றிருக்கலாம். அது போல்,  வரி விதிப்பு சட்டங்களில்‌ டிப்ளமோ, பொருளாதாரம்‌, கல்வி, சமூகவியல்‌, புள்ளியியல்‌ அல்லது உளவியலில்‌ பட்டம் பெற்றிருக்கலாம்.

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:உளவுத்துறை ஐ.ஜி. பணியிடமாற்றம்... புதிய உளவுத்துறை ஐ.ஜி.யாக செந்தில்வேலன் நியமனம்!!

சமூக அறிவியல்‌, சமூகவியலில்‌ முதுகலை பட்டம்‌ அல்லது டிப்ளமோ படித்தவர்களாகவும் தொழில்துறை அல்லது தனிநபர்‌ மேலாண்மை அல்லது தொழிலாளர்‌ நலனில்‌ அனுபவம்‌, கிராமப்புற சேவையில்‌ முதுகலை பட்டமும் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்‌ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.வயது வரம்பை பொறுத்தவரையில் 21 வயது நிறைவடைந்தவராகவும்‌ 39 வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌. நிரப்பப்படவுள்ள இந்த பணியிடங்களுக்கு மாத ஊதியமாக ரூ.56,100 முதல் 2,05,700 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குரூப் 1 தேர்வுக்கு பதிவுக்‌ கட்டணம்‌ ரூ.150யும் முதனிலைத்‌ தேர்வு ரூ.100 யும் முதன்மை எழுத்துத்‌ தேர்வு ரூ.200யும் விண்ணப்ப கட்டணமாக பெறப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டணத்தை ஆன்லைன்‌ மூலம்‌ செலுத்த வேண்டும்‌. நேர்முகத்‌ தேர்வு அடங்கிய பதவிகளுக்கு மூன்று நிலைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதாவது, எழுத்துத்‌ தேர்வு, முதல்நிலைத்‌ தேர்வு, முதன்மை எழுத்துத்‌ தேர்வு, நேர்காணல்‌, வாய்மொழித்‌ தேர்வு மற்றும்‌ கலந்தாய்வு அடிப்படையில்‌ தகுதியானவர்கள்‌ தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க:TNPSC : டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட இம்பார்டன்ட் அனௌன்ஸ்மென்ட்.. உடனே இதை படிங்க.. !

click me!