தலைமைச் செயலகத்தில் பணியாற்ற செய்தியாளர்கள் தேவை என அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தலைமைச் செயலக பணியில் அடங்கிய தமிழ் மற்றும் ஆங்கில நிருபர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி விவரங்கள்:
பதவி:
- நிருபர் பணி ((செய்தியாளர்) (தமிழ் மற்றும் ஆங்கிலம்))
காலிபணியிடங்கள்: 09
தகுதி:
- விண்ணப்பிக்கும் நபர்கள் பட்டப்படிப்புடன் தட்டச்சுத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தொழில்நுட்பக்கல்வி இயக்குநராகத்தால் நடத்தப்படும் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- இந்தப் பணியிடங்களுக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
ஊதியம்:
- தேர்வாகும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
- www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி:
விண்ணப்பக் கட்டணம்:
- விண்ணப்பக் கட்டணம் ரூ.150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
- தேர்வுக் கட்டணம் ரூ.200, இருப்பினும் SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம்:
- அக்டோபர் 17 முதல் 19 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும்.
கணினி வழித்தேர்வு:
- செய்தியாளர் பணிக்கான கணினி வழித்தேர்வு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும்.