இரண்டாம் கட்ட யுஜிசி - நெட் தேர்வு கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
யுஜிசி நெட் 2022 தேர்வு தொடர்பான புதிய அறிவிப்பை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (UGC), தேசிய தகுதித் தேர்வு அல்லது யுஜிசி நெட் 2 ஆம் கட்ட தேர்வுக்கான அட்மிட் கார்டு 2022 தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..டிகிரி இருந்தால் போதும்.. மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு
இதன் முதல் கட்டத் தேர்வு ஜுலை மாதம் 08, 09, 11, 12 ஆகிய நாட்களில் கணினி அடிப்படையில் நடத்தப்பட்டது. அரசியல் அறிவு, மராத்தி, சீனம், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 30 பாடநெறிகளுக்கு, நாடு முழுவதும் 225 நகரங்களில் உள்ள 300க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இரண்டாம் கட்டத் தேர்வு ஆகஸ்ட் 12,13,14 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நிர்வாக காரணங்களினால் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சமூக அறிவியல், அரசு அறிவியல், வரலாறு, இந்தி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட 64 பாடநெறிகளுக்கு செப்டம்பர் 20ம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்கள் ? மத்திய அரசில் காத்திருக்கிறது அருமையான வேலைவாய்ப்பு !
ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி ?
அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் - csirnet.nta.nic.in.
முகப்புப் பக்கத்தில் உள்ள “CSIR NET 2022 அட்மிட் கார்டைப் பதிவிறக்கு” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை கடவுச்சொல்லை கொண்டு உள்நுழையவும்.
உங்கள் ஹால் டிக்கெட் திரையில் காட்டப்படும்.
பிறகு பதிவிறக்கம் செய்து, நகலைப் பெறலாம்.
மேலும் செய்திகளுக்கு..அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க !!