இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு பணிகளுக்கு அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் திருவானைக்காவல் திருச்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி திருவானைக்காவலில் உள்ள அருள்மிகு ஜம்முகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் வெவ்வேறு பணிகளுக்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக இந்து சமய அறநிலைந்த்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தட்டச்சர், உதவி மின் பணியாளர், பெருக்குபவர் ஆகிய பணிகளுக்கு தலா 1 நபரும், காவலர் பணிக்கு 4 நபர்களும் வேலையில் சேர்க்கப்பட இருக்கிறார்கள். இந்தக் காலிப் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தட்டச்சர்:
தட்டச்சர் வேலைக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் அல்லது இவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் முதுநிலை தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாடு, அலுவலகத் தானியக்கத்தில் சான்றிதழ் படிப்பு தேர்ச்சி அல்லது அதற்குச் சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். இந்த வேலைக்கு ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை ஊதியம் வழங்கப்படும்.
உதவி மின்பணியாளர்:
மின்கம்பிப் பணியாளர் பிரிவில் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருந்தால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மின் உரிமம் வழங்கும் வாரியத்திடம் இருந்து 'H' சான்றிதழ் பெற்றவராக இருப்பதும் அவசியமாகும். இந்த வேலைக்குத் தேர்வாகிவிட்டால், ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை சம்பளம் கிடைக்கும்.
காவலர்:
இந்த வேலைக்கு மட்டும் 4 காலிப் பணியிடங்கள் காத்திருக்கின்றன. தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருந்தால், இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மாதச் சம்பளம் ரூ.15,900 முதல் 50,400 வரை கொடுக்கப்படும்.
பெருக்குபவர்:
பெருக்குபவர் பணிக்கு மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை ஊதியம் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த வேலையில் சேர்வதற்கும் தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிப்படை நிபந்தனை ஆகும்.
இந்து சமய அறநிலையத்துறையின் அனைத்து வேலைவாய்ப்புகளிலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடிப்படை கல்வித் தகுதி, பணி அனுபவம், செயல்முறை தேர்வு, கூடுதல் தகுதிகள் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
திருச்சி திருவானைக்காவலில் உள்ள அருள்மிகு ஜம்முகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு / விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை முழுமையாகப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்தும் டவுன்லோட் செய்யலாம்.
தவறாமல் தேவையான ஆவணங்களையும் இணைத்து, மே 11ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி:
உதவி ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு ஜம்முகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில்,
திருவரங்கம் வட்டம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 620005
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.5.2023
இந்த வேலைவாய்ப்பு பற்றிய கூடுதல் விவரங்களை www.tnhrce.gov.in அல்லது www.thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.