பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited -BEL) நிறுவனம் ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து மேலும் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டுமானால் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited -BEL) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமையிடம் பெங்களூர். தற்போது இந்நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த அறிவிப்பில் Trainee Engineer - I, பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு 55 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் மத்திய மற்றும் மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு குறைந்தது 5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாதம் 55,000 வரை ஊதியம் வழங்கப்படுகின்றது.
இதையும் படிங்க: First Step : தமிழகத்தில் கால் பதிக்கும் தைவானின் செருப்பு தயாரிக்கும் நிறுவனம்!
மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தெரிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://bel-india.in/) அறிந்து கொள்ளலாம்.