தமிழ்நாடு அரசின் மூலம் வெளிநாட்டு வேலைக்கு செல்லலாம்.. எவ்வளவு செலவாகும்? எப்படி விண்ணப்பிப்பது?

By Ramya s  |  First Published Feb 29, 2024, 1:36 PM IST

வெளிநாடுகளுக்கு வேலை செய்ய விரும்பும் தமிழர்களுக்கு, தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வழிகாட்டி வருகிறது


ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். இவர்களில் பலர் சரியான முகவர்கள் மூலம் சரியான வேலைக்கு சென்று நல்ல வருமானத்தை ஈட்டி வருகின்றனர். ஆனால் சிலரோ போலி முகவர்களை நம்பி சென்று தவறான இடத்தில் சிக்கி பல துன்புறுத்தல்களை சந்திக்கின்றனர். இவர்களில் சிலர் மட்டுமே அரசின் உதவி மூலம் பத்திரமாக நாடு திரும்புகின்றனர். 

இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு வேலை செய்ய விரும்பும் தமிழர்களுக்கு, தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வழிகாட்டி வருகிறது. இதன் மூலம் சரியான பாதுகாப்பான பணிகளுக்கு தமிழ் மக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

Latest Videos

undefined

ரூ.40,000 வரை சம்பளம்.. பெல் நிறுவனத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்புபவர்கள் இந்த நிறுவனத்தில் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சரியான பணிக்கு குறிப்பிட்ட தகுதியை பெற்றால் அவர்கள் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் செய்து கொடுக்கிறது. மேலும் அதற்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது. வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல வேண்டும் என்று விரும்புவோர் https://www.omcmanpower.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் மகேஸ்வரன் இதுகுறித்து பேசிய போது “ வெளிநாட்டிற்கு வேலை செய்ய வேண்டும் என்று விரும்பும் நபர்கள் எங்கள் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் வேலைவாய்ப்பு குறித்து எங்களிடம் தெரிவிப்பார்கள். இதுகுறித்த அறிவிப்பை ஊடகங்களில் வெளியிடுவோம். 

இந்த விளம்பரங்களை பார்த்து எங்கள் நிறுவனத்தில் வெளிநாட்டிற்கு வேலை செய்ய வேண்டும் என்று விண்ணப்பிப்பார்கள். அதன்பின்னர் அந்த பட்டியலை நாங்கள் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்புவோம். அதிலிருந்து அவர்கள் கல்வித்தகுதி, வயது அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்து அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரை அனுப்புவார்கள். 

இதை தொடர்ந்து நாங்கள் அந்த விண்ணபித்த நபருக்கு பாஸ்போர்ட், விசா, மெடிக்கல் டெஸ்ட் போன்ற விவரங்களை பெற்று அந்த நிறுவனத்திற்கு அனுப்புவோம். அது சரியாக இருக்கும் போது விமான டிக்கெட் வரும். அதன்பின்னர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் நபர்களுக்கு பயிற்சி கொடுப்போம். 

ரூ.63,300 வரை சம்பளம்.. மொத்தம் 1930 காலியிடங்கள்.. மத்திய அரசு வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

அவர்கள் எந்த நாட்டிற்கு செல்கிறார்கள் அந்த மொழி, பழக்கவழக்கங்கள், உணவு, காலநிலை போன்றவை குறித்து பயிற்சி அளிப்போம். இந்திய குடிவரவு சட்டத்தின் படி  ரூ.35,000 கட்டணமாக வசூலிக்கிறோம்.. அதற்கு மேல் எந்த கட்டணமும் வாங்கவில்லை.  எனவே வெளிநாடு வேலைக்கு செல்வோர் எங்களின் இணையதள மூலம் விண்னப்பிக்கலாம். அவர்களின் தகுதிக்கேற்றவாறு வெளிநாடுகளில் வேலை இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மெயில் அல்லது வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவிப்போம்” என்று தெரிவித்தார். 

click me!