மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் நாட்டின் பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. நாட்டின் பல்வேறு துறைகளில் தேவையான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை இந்த நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட பொருட்களை பெல் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் பெல் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள ட்ரெய்னி என்ஜினியர் பணிக்கு 47 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பொதுப்பிரிவில் 18 பேரும், EWS பிரிவில் 4 பேர், எஸ்.சி பிரிவில் 8 பேர், எஸ்டி பிரிவில் 4 பேர் என மொத்தம் 47 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
undefined
ரூ.63,300 வரை சம்பளம்.. மொத்தம் 1930 காலியிடங்கள்.. மத்திய அரசு வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சம்பளம் :
இந்த பணி தற்காலிகமான பணி. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் 3 ஆண்டு வரை பணியமர்த்தப்படுவார்கள். ட்ரெய்னி என்ஜினியர் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு முதல் ஆண்டு ரூ.30,000, 2-வது ஆண்டு ரூ.35,000, 3-வது ஆண்டு ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
பி.இ, பி.டெக், பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் https://bel-india.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மார்ச் 7 வரை ஆன்லைன் மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.177 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பிக்லாம்.
தேர்வு முறை :
எழுத்துத்தேர்வு, நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் காசியாபாத், விசாகப்பட்டினம், மும்பை, இந்தூர், கொல்கத்தா, கொச்சி ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.