ரூ.35,000 சம்பளம்.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. ரயில்வே பாதுகாப்பு படையில் 4660 காலியிடங்கள்..

By Ramya sFirst Published Feb 27, 2024, 4:11 PM IST
Highlights

ரயில்வே பாதுகாப்பு படையில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆர்பிஎஃப் (Railway Protection Force) என்ற ரயில்வே பாதுகாப்பு படையில் உள்ள காலியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்த முழுவிவரத்தை பார்க்கலாம். 

காலியிட விவரம் :

ரயில்வே பாதுகாப்பு படையில் மொத்தம் 4, 660 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கான்ஸ்டபிள் பதவிக்கு 4,208 பேரும், சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு 452 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

தென்னக ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. 2860 பணிகளுக்கு உடனே ஆட்கள் தேவை - எப்படி விண்ணப்பிப்பது?

கல்வித்தகுதி :

கான்ஸ்டபிள் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போது. சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு ஏதெனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு :

சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு 20 முதல் 28 வயதுக்குட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கான்ஸ்டபிள் பணிக்கு 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வயது வரை வயது தளர்வு அளிக்கப்படும். 

சம்பளம் :

சப் இன்ஸ்பெக்ட பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ. 35,400 வரை சம்பளம் வழங்கப்படும்
கான்ஸ்டபிள் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ. 21,700 வரை சம்பளம் வழங்கப்படும். பின்னர் அரசு விதிகளின் படி சம்பள உயர்வு இருக்கும். 

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியும் ஆர்வமும் கொண்ட நபர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு இல்லை.. 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. ரூ.62,000 வரை சம்பளம்.. தமிழக அரசு வேலை... விவரம் இதோ..

விண்ணப்பிக்கும் தேதி : 15.04.2024 முதல் 14.05.2024 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்:

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.500 விண்ணப்பக் கட்டணமாகும். எஸ்.சி, எஸ்டி, முன்னாள் ராணுவ வீரர்கள், பெண்கள், சிறும்பான்மையினர் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு ரூ. 250 விண்ணப்பக்கட்டணம் ஆகும். 
 

click me!