தென்னக ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. 2860 பணிகளுக்கு உடனே ஆட்கள் தேவை - எப்படி விண்ணப்பிப்பது?

Ansgar R |  
Published : Feb 26, 2024, 04:21 PM IST
தென்னக ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. 2860 பணிகளுக்கு உடனே ஆட்கள் தேவை - எப்படி விண்ணப்பிப்பது?

சுருக்கம்

Southern Railway Apprentices Recruitment : தென்னக ரயில்வே, பிட்டர் மற்றும் வெல்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில், Apprentices முறையில் இளைஞர்களை பணியமர்த்த உள்ளது.

பெரம்பூர், அரக்கோணம், ஆவடி, சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில், தென்னக ரயில்வேயின் கீழ் Apprentices என்பதும் பயிற்சி பெரும் நபர்களாக பணிசெய்ய இப்பொது ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பெற்று வருகின்றது தென்னக ரயில்வே. பிட்டர், பைன்டர், வெல்டர், Wireman, டர்னர் என்று பல்வேறு பணிகளில் ஆட்களை தேர்வு செய்யவுள்ளது தென்னக ரயில்வே.

விண்ணப்பிக்கும் முறை

நாளை மறுநாள் பிப்ரவரி 28ம் தேதியோடு இந்த பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெரும் நாள் நிறைவுபெறவுள்ளது. ஆகவே அதற்கு முன்னதாக தென்னக ரயில்வேவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் தரவுகளை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். 

+2 தேர்ச்சி போது! KVK நிறுவனத்தில் அதிரடி வேலை... உடனே விண்ணப்பியுங்கள்!

கல்வி மற்றும் வயது வரம்பு 

சில பணிகளுக்கு 50 சதவிகித மதிப்பெண்களுடன் 10ம்வகுப்பு முடித்திருக்க வேண்டும், அதே போல சில பணிகளுக்கு 50 சதவிகித மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 15 முதல் 24 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

ஓபிசி பிரிவினருக்கு 3 வருடமும், SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 வருடமும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட தளர்வும் அளிக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், தங்கள் மதிப்பெண்ணின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இந்திய கடலோர காவல் படையில் வேலை.. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

RRB வேலைவாய்ப்பு Big Alert: இன்று விண்ணப்பிக்காவிட்டால் வாய்ப்பு போகும்!
CSIR UGC NET தேர்வர்களே அலர்ட்! உங்கள் தேர்வு மையம் எங்கே? வெளியானது முக்கிய அறிவிப்பு!