
இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள 260 Navik பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. ஆர்வமும் தகுதியும் கொண்ட நபர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் படி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும்.
காலிப்பணியிடங்கள் விவரம் :
வடக்கு மண்டலம் – 79 பணியிடங்கள்
மேற்கு மண்டலம் – 66 பணியிடங்கள்
கிழக்கு மண்டலம் – 33 பணியிடங்கள்
வடகிழக்கு மண்டலம் – 38 பணியிடங்கள்
வடமேற்கு மண்டலம் – 12 பணியிடங்கள்
அந்தமான் & நிகோபார் – 3 பணியிடங்கள் என மொத்தம் 260 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வடக்கு மண்டலத்தில் ஜம்மு காஷ்மீர், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், சண்டிகர் ஆகியவை உள்ளன. சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம், கர்நாடகா,அ கோவா, தாதர் நாகர் ஹவேலி, டாமன் டையு, லட்சத்தீவு ஆகியவை மேற்கு மண்டலத்தில் வருகின்றன. பீகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட, அசாம், திரிபுரா, மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மிசோரம், சிக்கிம், ஒடிஷா ஆகியவை வடகிழக்கு மண்டலத்தில் வருகின்றன. ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவை கிழக்கு மண்டலத்தில் வருகின்றன.
கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணக்கு, இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளை படித்திருப்பது அவசியம்.
வயது வரம்பு :
18 வயது முதல் 22 வயது வரை உள்ள இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் :
இந்திய கடலோர படையில் உள்ள இந்த காலிப்பணியிடங்களுக்கு ரூ. 21,700 அடிப்படை சம்பளமாக வழங்கப்படும். அதனுடன் அகவிலைப்படி உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கும்.
தேர்வு முறை :
கணினி வழி தேர்வு, உடல் தகுதி, மெடிக்கல் பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு உட்பட 4 கட்டங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
+2 தேர்ச்சி போது! KVK நிறுவனத்தில் அதிரடி வேலை... உடனே விண்ணப்பியுங்கள்!
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்க கட்டணம் ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதன்படி இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த 13-ம் தேதி தொடங்கிய நிலையில் அதற்கான கடைசி நாள் 27.02.2024 ஆகும். அதாவது நாளையே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.