தேர்வு இல்லை.. 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. ரூ.62,000 வரை சம்பளம்.. தமிழக அரசு வேலை... விவரம் இதோ..

By Ramya sFirst Published Feb 26, 2024, 9:54 AM IST
Highlights

இந்து சமய அறநிலையத்துறையின் தூத்துக்குடி அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. கோவில் நிர்வாக பணிகளில் உள்ள  காலியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது தூத்துக்குடியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஓட்டுநர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும், தகுதியும் கொண்ட நபர்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

+2 தேர்ச்சி போது! KVK நிறுவனத்தில் அதிரடி வேலை... உடனே விண்ணப்பியுங்கள்!

பணியிட விவரங்கள்

ஓட்டுநர் பணியிடங்கள் 4, அலுவலக உதவியாளர் 4 பணியிடங்கள் என மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தூத்துக்குடியிலேயே பணியமர்த்தப்படுவார்கள். 

கல்வித்தகுதி :

ஓட்டுநர் பணிக்கு 8 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும். 

வயது வரம்பு :

ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் என இரு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 – 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எம்.பி.சி, பிசி உள்ளிட்ட பிரிவினருக்கு 2 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு உண்டு. 

மாதம் ரூ.70 ஆயிரம் ஊதியம்.. ட்ரைவர் முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை.. மத்திய அரசு வேலையில் சேர வாய்ப்பு

சம்பளம் :

ஓட்டுநர் பணியிடத்திற்கு மாதம் ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளம் கிடைக்கும். அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளம் கிடைக்கும். இந்த பணி நியமன்ம முற்றிலும் தற்காலிகமானது. 

தேர்வு முறை :

தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு கிடையாது. 

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க 20.03.2024 கடைசி நாளாகும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, அழகேசபுரம், மெயின் ரோடு, தூத்துக்குடி – 628 001

click me!