+2 தேர்ச்சி போது! KVK நிறுவனத்தில் அதிரடி வேலை... உடனே விண்ணப்பியுங்கள்!

By Kalai Selvi  |  First Published Feb 24, 2024, 4:05 PM IST

கிரீன் வேளாண் அறிவியல் மையத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை. முழு விவரம் உள்ளே...


தமிழ்நாட்டில் உள்ள அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் Creed Krishi Vigyan Kendra நிறுவனம், தற்போது வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எஸ்எம்எஸ் (SMS) மற்றும் சுருக்கெழுத்தாளர் பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. 

இப்பணிக்கு, +2 தேர்ச்சி மற்றும் கால்நடை அறிவியல் அல்லது விலங்கு அறிவியல் பாடப் பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் விண்ணப்பங்களை விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்போது இது குறித்த மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.. 

Tap to resize

Latest Videos

undefined

KVK எஸ்எம்எஸ்(SMS) பணிக்கான முழு விவரம்:
மாத சம்பளம் :  ரூ. 56,100
வயது வரம்பு : 35 வயதுக்குள்  இருக்க வேண்டும் 
தகுதி : அறிவியல் அல்லது விலங்கு அறிவியல் பாடப் பிரிவில் முதுநிலை பட்டம்

இதையும் படிங்க: மாதம் ரூ.70 ஆயிரம் ஊதியம்.. ட்ரைவர் முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை.. மத்திய அரசு வேலையில் சேர வாய்ப்பு

KVKசுருக்கெழுத்தாளர் பணிக்கான முழு விவரம்:
மாத சம்பளம் :  ரூ. 25,500
வயது வரம்பு :  27 வயதுக்குள்  இருக்க வேண்டும்
தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிமிடத்திற்குள் 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறனும், 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படிங்க:  டிப்ளமோ படித்திருந்தால் போதும்.. ரூ.20,000 சம்பளத்தில் தேசிய ஊரக நல வாழ்வு மையத்தில் வேலை..

விண்ணப்ப கட்டணம் : பொது பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்கு ரூபாய் 250.

விண்ணப்பிக்க கடைசி நாள் : மார்ச் 01, 2024.

விண்ணப்புக்கு முறை : இந்த பணிக்கான விண்ணப்பங்களை  https://kvkariyalur.org/ என்ற இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்த பின்னர், அதனுடன் உங்களது சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து,
The chairman,
ICAR - Krishi Vigyan Kendra,
Cholamadevi Post,
Jayankodam,
Udayarpalayam Taluk,
Ariyalur District - 612 902,
Tamilnadu... என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!