சென்னை மாவட்ட வருவாய் அலகில் உள்ள 9 வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 12 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு, விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: தமிழக அரசு வேலை
காலி பணியிடங்கள்: 12
பணியின் பெயர்: கிராம உதவியாளர்
பணியிடம்: சென்னை
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அக்.10 ஆம் தேதி விண்ணப்ப பதிவு தொடங்கியது.
விண்ணப்பிக்கும் முறை:
https://tn.gov.in, https://cra.tn.gov.in, https:/.chennai.nic.in ஆகிய இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் அனுப்ப வேண்டும் வேண்டும்.
மேலும் படிக்க:எஸ்பிஐ வங்கியில் 1,673 காலி பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்று தான் கடைசி..
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது 21 பூர்த்தியடைந்ததாக இருக்க வேண்டும். பொது பிரிவினருக்கு அதிகபட்சம் வயது 32, இதர வகுப்பினருக்கு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும். குறைந்தப்பட்சம் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.11,000 - ரூ.35,000 வரை வழங்கப்படும்.
முக்கிய குறிப்பு:
சம்பந்தப்பட்ட வட்டத்தினை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதர வட்டம் மற்றும் மாவட்டத்தினை சேர்ந்தவர்களது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. சிபாரிசு செய்யபடும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும் படிக்க:10, 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் அஞ்சல் துறையில் கை நிறைய சம்பளத்தில் வேலை.. விவரம் இதோ !!