SBI PO application form 2022 closes today : எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள Probationary Officer பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் முடிவடைகிறது. இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தின் பெயர்: எஸ்பிஐ
காலி பணியிடங்கள்: 1,673
பணியின் பெயர்: Probationary Officer
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் செப்.22 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் முடிவடைகிறது. அதனால் விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
விண்ணப்பிக்கும் முறை:
sbi.co.in/careers அல்லது sibpsonline.ibps.in. என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பப் படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்,டி மற்றும் நிர்ணயிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:SBI யின் 1,673 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2022 .. டிகிரி முடிந்திருந்தால் போதும்.. விவரம் இதோ
வயது வரம்பு:
வயது வரம்பு 21 - 30 க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித் தகுதி:
அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனத்தில் ஏதாவது பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பிற்குட்பட்டு தற்போது இறுதியாண்டு ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படும் போது அல்லது டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தேர்ச்சி சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யபடும் முறை:
முதல் நிலை, முதன்மை மற்றும் திறனறிவு ஆகிய மூன்று கட்ட தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
முதன்மை மற்றும் திறனறிவு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிபடையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும்.
முதல்நிலை தேர்வு டிசம்பர் 17 - 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது..?
1, sbi.co.in/careers என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும்.
2, பின்னர் விண்ணப்பத்தினை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்
3, ஸ்கேன் செய்யப்பட்ட விண்ணப்பதாரர் புகைப்படம் மற்றும் கையெழுத்து ஆகியவற்றை பதிவேற்ற செய்ய வேண்டும்.
4, விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.
5, விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், அலுவலக நேரங்களில் ( 11 am to 6 pm) எஸ்பிஐ உதவி மையத்திற்கு ( 022 22820427 ) தொடர்புக் கொண்டு கேட்டுக் கொள்ளலாம்.
மேலும் படிக்க:தீவிரவாதிகளை கொல்லுவதற்கு காரணமாக இருந்த ஜூம் நாய்க்கு அறுவை சிகிச்சை!!