டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களை கண்டித்து மெமோ அனுப்பியதா? நடந்தது என்ன?

By Dhanalakshmi GFirst Published Jun 1, 2023, 3:47 PM IST
Highlights

மாதத்தில் 12 நாட்களுக்கு அலுவகத்திற்கு வந்து பணி செய்யாதவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்து இருந்ததாக வெளியாகி இருக்கும் செய்தியை அந்த நிறுவனம் மறுத்துள்ளது.
 

அலுவலகத்திற்கு வந்து பணி செய்ய வேண்டும் இல்லையென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களை எச்சரித்து இருப்பதாகவும், மெமோ அனுப்பி வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த செய்தியை மறுத்து டிசிஎஸ் செய்தி தொடர்பாளர் வெளியிட்டு இருக்கும் செய்தியில், ''வாரத்தில் மூன்று நாட்கள் வீட்டில் இருந்து பணி செய்வதை டிசிஎஸ் நிறுவனம் ஊக்குவிக்கிறது. ஆனால், இதுதொடர்பாக எந்த எச்சரிக்கை அறிக்கையும் ஊழியர்களுக்கு அனுப்பவில்லை, இழப்பீடு குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியாகி இருந்த செய்தியில், ''மாதத்தில் 12 நாட்கள் அலுவலகத்தில் இருந்து பணி செய்யாவிட்டால் மெமோ அனுப்பப்படும் என்று டிசிஎஸ் நிர்வாகம் ஊழியர்களை எச்சரித்து இருந்ததாக செய்தி வெளியாகி இருந்தது. அவ்வாறு பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது.  

IBPS PO Recruitment 2023: வங்கி துறையில் வேலைவாய்ப்பு... IBPS-யில் PO பதவிக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு!!

இதுகுறித்து மேலும் விளக்கம் அளித்து இருக்கும் டிசிஎஸ் நிறுவனம், ''எங்களது வளாகம் என்றும் ஊழியர்களின் ஆற்றலுடன் இயங்க வேண்டும் என்று விரும்புகிறோம். எங்கள் ஊழியர்கள் அனைவரும்  துடிப்பான சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமான எண்ணிக்கையிலான ஊழியர்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். டிசிஎஸ் சூழலுடன் ஒத்துழைத்து, கற்றுக் கொண்டு, நகைச்சுவை உணர்வுடன் ஒன்றாக வளர வேண்டும் என்பது முக்கியம். இதன் மூலம் நிறுவனத்தை வலுப்படுத்த வேண்டும், ஒருங்கிணைக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

இனி பொறியியல் போல் முதுகலை படிப்பிற்கும் கவுன்சிலிங் நடத்தப்படும்- அமைச்சர் பொன்முடி தீர்மானம்..!!

கடந்த பல மாதங்களாக, இந்தியாவில் உள்ள எங்களது நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று ஊக்குவித்து வருகிறோம். அவ்வாறு அலுவகத்திற்கு வரும் ஊழியர்களால் எங்களது நிறுவனத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது'' என்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஊழியர்கள் 100 சதவீதம் வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று டிசிஎஸ் தெரிவித்து இருந்தது. இது கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அவசியமான ஒரு சூழ்நிலையாக இருந்தது. அதேநேரம், வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யுமாறு ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தது.

click me!